பொடியும் நானும்

நொடிக்கொருதரம் - என்
நாசிதனை
நுகர்ந்து இழுக்கும் - பொடியே
நகர்ந்திடு - இன் நொடியே.

நீ - என்னை
நேசிப்பது எதற்காக? - அல்லது
நான் உன்னை
நாடுவது எதற்காக?

என் நாசிதனியில் - நீ
குடியிருக்கும் ஒவ்வொரு
நொடியும் - என்
நாடி அல்லவா சூடேறுகிறது.

நீ சூட்டைத் தருகின்ற
உணர்வின் வெளிப்பாடா? - அல்லது
உணர்வினை மெல்ல
உண்கின்ற விஷக் கிருமியா?

நீ ஒரு விஷக் கிருமி - என அறிந்தும்
நான் உன்னை அல்லவா
நாடி அலைகின்றேன். - என்னை
அலையவைக்கும் பொடியே - உயிருக்கு
உலைவைக்க - என் நாசி என்ன
இலைவிரித்த தலை வாழையா?

வாழை இலையில் பரிமாறிய
விருந்து படையலைப் போல்
விரும்பி என்னையும் நாடி வந்தாயே?

நாடி வந்தப் பொடியே - உன்னை
நான் விலக்க
நினைத்தாலும் - நீ என்னை
நினைக்க மறப்பதே இல்லை.
நீ நினைக்கும் போதெல்லாம் - என்
நாசிக்குள் சென்று வாழுகின்றாய்.
நீ வாழ வாழ - என் வாழ்வல்லவா
நசுங்கிய காகிதம்போல்
தூக்கி எறியப்படுகிறது. - கட்டை
எறிந்தால் கரியாகும். - இந்த உயிர்க் கட்டை
எரியும்போது உன் நெடி பொறியாகும்.

நீ விலகிப் போவாயா? - இல்லை
நான் விலகிப் போவேனோ? - இதில்
எது நடக்கும் பொடியே.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (12-Nov-14, 6:32 am)
பார்வை : 54

மேலே