சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

சிற்பியே உன்னை செதுக்குகிறேன்...

உளியால் நீ என்னை செதுக்கும் போது,
உனக்கு வேண்டிய படி இருக்கிறேன்...
மறுப்பேதும் சொல்லாமல்...

பாறையாய் இருக்கும் என்னை,
நீ சிலையாய் செதுக்குகிறாய்...
சிற்பியே நான் செதுக்குகிறேன்,
உன்னை...
வாழ்க்கையில் வலியைபொறுத்தால்
தான் ஜொலிக்க முடியும் என்று...

என்னிடம் தேவை இல்லாத பகுதியை,
நீக்கி நீ என்னை சிலையாக்கினாய்....

நான் உன்னை செதுக்குகிறேன்...
உன்னிடம் இருக்கும் கோபம்,பொறாமை,
சுயநலம் நீக்கி....

நீ என்னை செதுக்கி சிலையாக்கினாய்...
நான் உன்னை செதுக்கி சிற்பியாக்கினேன்...

திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
. பொன்னூர் மலை -604 505
வந்தவாசி .

எழுதியவர் : (15-Nov-14, 1:26 pm)
பார்வை : 259

மேலே