நட்பின் சான்று

நட்பு...
அழும் போது...
கண்ணீரை துடைக்கும்...

கவலைப்படும் போதெல்லாம்,
ஆறுதல் தரும்...

உறவுகள் இல்லாமல் வந்து...
பாசத்தில் அன்னையாய்...
கண்டிப்பில் தந்தையாய்...
அறிவுரையில் ஆசானாய்...
மாறிப்போகும் நட்பு...

பாசத்தை பகிர்ந்து தந்து...
நம்மை உண்மையாய் நேசிக்கும்
நட்பு...

காதல் கூட எதையாவது எதிர்பார்க்கும்...
நட்பு எதிர்பார்ப்பது எல்லாம்
நட்பை மட்டுமே...

நிலவில் கூட களங்கம் இருக்கலாம்...
நட்பில் கிடையாது...

கறந்தபாலின் தூய்மை...
செந்தீயின் தூய்மை...
பனித்துளியின் தூய்மை ...
குழந்தை மனம்...
இவைகள் தான் நட்பின் சான்று...
இவைகளை போலவே,
நட்பும் பரிசுத்தமானது.....


திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி.
பொன்னூர் மலை - 604 505
வந்தவாசி.

எழுதியவர் : (15-Nov-14, 1:47 pm)
Tanglish : natpin saandru
பார்வை : 112

மேலே