அதிசயங்கள் ஆறு
கதவிடுக்கு வழியே
எட்டிப் பார்த்த கருவண்டு விழிகளை
இன்று பார்ப்பது அதிசயம்.....
மூடிய முந்தானை சற்றும்
விலகாத நிலை இன்று அதிசயம்...
நிலம் பார்த்து பெண் நடப்பது அதிசயம்..
நிமிர்ந்து பார்த்து
பதில் சொல்லாதது அதிசயம்.....
கேள்விக்கு பதில் இல்லாமல்
எதிர்த்து பேசாதது அதிசயம் ...
இருட்டினாலும் அசந்து போகாமல்
நினைத்த வேலையை முடித்து
திரும்பும் பெண்கள் அதிசயம்...
அதிசயமே அசந்து போகும்
இன்றைய பெண்கள்
அதிசயத்திலும் அதிசயம்...