தாய் தந்தை அன்பு

பெற்றவருக்கு பிள்ளையுமானென்!
____பெரும் தொல்லையுமானேன்!!

இல்லை என்றுசொன்னால்
____இடியென பிடிவாதமானேன்!!

பள்ளிக்கு செல்லாமல்
____பாவம் அரிவிலியானென்!!

எல்லாமறிந்தும் தடிக்கொடுத்தீர்
____எண்ணங்களில் நேர்மையானேன்!!

கோவிலேனும் குருகுலத்தில்
____முதல் மாணவனானேன்!!

கல்லூரியெனும் காதலிலும்
____கால் பதித்தேன்!!

காதல்தோல்வியெனும் கடலில்
____தன்னிலை மறந்தேன்!!

கட்டிப்பிடித்து கரையேற்றிய
____உங்களால் என்னையறிந்தேன்!!

தன்னையிழந்து என்னை
____பெற்ற தாய்மையறிந்தேன்!!

தன்னலம் காணாத
____என்தந்தையின் நேர்மையறிந்தேன்!! - என்

தவறில் தாங்கள்கொண்ட
____வலியை அறிந்தேன்!!

வலியைய் பொறுத்த
____வல்லமை அறிந்தேன்!! - அவைகள்

வல்லமையல்ல என்
____மேலுள்ள அன்பெனறிந்தேன்!!!



ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

எழுதியவர் : பாபு (15-Nov-14, 9:43 pm)
பார்வை : 371

மேலே