சொல்வேனா சொல்வேனா

என்னத்த சொல்வேன் ..
நீ எனை ஏற்றுக் கொண்டால்
>>>
உனக்கு தெரியாமல் உன்னை ரசித்ததை
சொல்வேனா ....
இல்லை
உனக்குப் பின்னாடி உன்னைப் போல் நடந்ததை
சொல்வேனா .....

காற்றில் உன் பேரை எழுதி எழுதி கனவுகள் கண்டதை
சொல்வேனா .....
இல்லை
வீட்டுச் சுவரில் வீட்டுக்கு தெரியாம உன் பேரை எழுதியதை
சொல்வேனா .....

மழலை அழும் போது உன் நினைவால் அதை பார்த்து சிரித்ததை
சொல்வேனா,,,
இல்லை
உன் யோசனையால் கீழே விழுந்ததை யாருக்கும் சொல்லாமல் மறைத்ததை
சொல்வேனா ......

என் தோழியுடன் கதைப்பதைப் போல உனைப் பார்த்து மறந்து போனதை
சொல்வேனா ......
இல்லை
என் தோழியிடம் நீ கதைப்பதைப் பார்த்து எரிந்து போனதை
சொல்வேனா ...

உன்னால் என் தூக்கம் திருடு போனதை
சொல்வேனா .....
இல்லை
என் நேரத்தை உன்னை நினைத்து தொலைத்ததை
சொல்வேனா ...

உனக்கு காயம் பட்டதைக் கண்டு துடித்ததை
சொல்வேனா ....
இல்லை
எனக்கும் அவ் காயத்தை ஏற்படுத்தினேன் என்பதை
சொல்வேனா...

கண்ணுக்குள் உன்னை பூட்டியதை
சொல்வேனா...
இல்லை
என் கண்களுக்கு பதிலா உன் கண்ணை எடுத்ததை
சொல்வேனா ...

தனிமையில் உன்னால் அழுததை
சொல்வேனா ...
இல்லை
தனிமையில் உன்னால் தவித்ததை
சொல்வேனா....

பூக்களின் இதழை பறித்ததை
சொல்வேனா...
இல்லை அந்த பூக்காரனிடம் திட்டு வாங்கியதை
சொல்வேனா ....

மனதுக்குள் ஆசை வளர்த்ததை
சொல்வேனா ..
இல்லை
அதை உன்னிடம் மறைத்ததை
சொல்வேனா.....

தூக்கத்தில் கதைத்தை
சொல்வேனா....
இல்லை
தும்மலில் உன்னை நினைத்ததை
சொல்வேனா .....

இவை எல்லாம் சொல்வதற்கு முன்பே
என் அன்பபை உன்னிடம் சொல்வேனா .....

உன்னோடு உன்னோடு கலந்து விட்டேன் -இனி
மண்ணோடு போனாலும் உன்னை
கண்ணோடு கண்ணாக காதலிப்பேன் ...
நான் இறக்கும் வேளையிலும் .......

எழுதியவர் : கீர்த்தனா (15-Nov-14, 10:17 pm)
பார்வை : 70

மேலே