உணர்வுகளின் ஊர்வலம்
மண்ணில் ஒரு சொர்க்கம் தோன்றியது
மறையாத சில நினைவுகளை சேர்க்க
கல்லூரி என்ற வடிவம் பெற்றது
இறுதி வரை நட்புடன் நினைக்க
எங்கிருந்தோ வந்தோம் அறிமுகம் இல்லாத முகவரிகளுடன்
ஒன்றாய் கலந்தோம் இதயத்தின் சுகவரிகளுடன்
ஒன்றும் அறியாதவனை கல்லூரிக்குள் நுழைந்தோம்
அனைத்தும் அறிந்தவனாக கல்லூரியை விட்டு பிரிகிறோம்
இனி
மீண்டும் இந்த கல்லூரியை காண நாள் ஒன்று வரும்
பார்க்கும் இடம் எல்லாம் நம் நினைவுகள் இடம் பெறும்
சுற்றி திரிந்த இடங்கள்
வருடம் எட்டி சென்று நினைவுடூம்
தொட்டு சென்ற மரங்கள்
தளை அசைத்து வழிக்காடூம்
நடந்து சென்ற பாதைகள் மாற்றம்
கொண்டு ஒளியூட்டும்
தெரிந்த பலரை கண்கள் தேடி தடுமாறும்
அறிந்த பலரை அறியாமல் மனம் வாடும்
கனவாய் பிரிந்து போனாலும்
நினைவாய் இங்கு வாழட்டும்
அழியாத சில நினைவுகளும்
கலையாத பல இதயங்களும்
K.VIGNESH
ECE FINAL YEAR
M.A.M COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
SIRUGANUR, TIRUCHIRAPPALLI-621 105
MOBILE NUMBER : +91 9751636870