என்ன கவலையோ

அடைமழை
அடங்கியிருக்க
சோகமேகம்
சூழ்ந்த முகங்கள்
துயர சம்பவத்தின்
துக்க விசாரிப்புகளில்
வழியும் கண்ணீர்

குடிபோதையில்
காரோட்டி
நடைபாதையில்
உறங்கிய
நிறைமாத கர்ப்பிணி
அவளோடு கணவனையும்
குருதியில்
மிதக்கவைத்து
கொன்ற
அந்தக் கொடுமையை

மனது நினைக்கையில்
தேகம் நடுங்குது,
உணவும் வீடும்
இல்லாத ஏழைக்கு
உதவாம போனால்
இறைவனுக்கும்
ஏது மரியாதை?
அவனுக்கு
என்ன கவலையோ?

எழுதியவர் : கோ.கணபதி (16-Nov-14, 10:16 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : yenna kavalaiyo
பார்வை : 143

மேலே