காதல் கோமாளி

அந்த சுந்தரியை நம்பி நி போகாதே !
உன் சுதந்திரம் பறிப்போகும் ஜாக்கிரதை !
சீறும் பஜாரியை நீ நம்பு – ஆனா
சிரிக்கும் சிங்காரியை நம்பாதே !

காதலென்றப் பெயரால கண்ணடிப்பா
காமப்பாலில் கவிதையெழுதி தினமளிப்பா
மோதலென்று வந்துவிட்டால் பின்னே நிப்பா
மொத்தத்தையும் சுரண்டிக்கிட்டு டிமிக்கி கொடுப்பா

தேவதாசு வேஷம் உனக்கு வேணுமா ?
அந்த தேவதையை ஓரம்கட்டு தூரமா !
காசு பணம் இருந்தாதான் நி சிங்கமாம் !
காலண்ணா இல்லைன்னா நி அசிங்கமாம் !

உருவம் அழகாய் இருந்தால் போதும்
ஒருவளை ஆயிரம் கண்கள் மேயும்
இது வாலிபப் பருவ கோளாறு
நி வலியப்போய் வழியக்கூடாது !

பொம்பளை சிரிச்சாப் போதும்
அங்க பொதுவா கூட்டம் கூடும் !
அங்கே நடப்பது வெட்டிப் பேச்சு
அவள் பிழைக்க வழிவகையாச்சி !

அரசன் ஆண்டியான கதைகள்
உலகில் ஆயிரக்கணக்கில் இருக்கு !
புருஷன் போண்டியானப் பிறகும்
புடவை கடையில் பொறுமை எதுக்கு ?

உனக்கென்று ஒருத்தி வந்தானப்பிறகு
இன்னொரு கூத்தி உனக்கு எதற்கு ?
மன்னர் ஆட்சி வழக்கொழிந்து – இது
மக்கள் ஆட்சியின் நல்விருந்து !

விருந்தில் நி ஒரு அங்கம்
உன் குடும்பம் சுத்த தங்கம்
தங்கத்தை புதைத்து தகரத்தை தேடாதே
சிங்கத்தைப் பழித்து நாகத்திடம் பழகாதே
நி சிகரம் தொடுகின்ற திரு மணவாளன்தான்
சிறிது கவனம் குறைந்தாலும்- உன்
வாழ்க்கை அதல பாதாளம்தான் !

எழுதியவர் : இரா.மணிமாறன் (16-Nov-14, 7:27 pm)
Tanglish : kaadhal komali
பார்வை : 135

மேலே