தமிழ் மரவன்

கோடியென வாழ்ந்த எம் சொந்தங்களை கூடி கொலை செய்தாயே..!

கற்ப்பென்று வாழ்ந்த எம் குல பெண்டிரை கலங்கம் செய்து சிரித்தாயே..!

புத்தகம் ஏந்தும் பிஞ்சுகளைதுப்பாக்கி ஏந்த வைத்தாயே..!

வீரனென வாழ்ந்த ஆடவரை வீசி சரித்தாயே..!

எங்குலத்தை கருவருத்து மகிழ்ந்து நின்றாயே..!

சர்வாதிகார சனியே கேட்டுக்கொள்..!

மரண ஓலத்தின் நடுவே வெற்றி  மயக்கம் கொண்டு நீ கிரங்கியிறுக்க ..

மதியவேளையில் உன் மார்புகூட்டினுள் என் கத்தி பாயந்திருக்க..

வீருகொண்டு செருக்குடன்  கர்ஜிப்பேனடா  "நான் தமிழ் மரவன்" என்று..!

 

எழுதியவர் : ப.உதயவன் (16-Nov-14, 11:46 pm)
பார்வை : 175

மேலே