கனவு மெய்ப்பட வேண்டும் - கார்த்திகா

செல்லரித்துப் போன
சட்டப்புத்தகம் செதுக்கப்படல் வேண்டும்
இரும்பினால் !

சிந்தும் ஒவ்வொரு
வியர்வைத்துளிக்கும்
நியாயம் வேண்டும்!

உழைப்பாளியின் காலடிகள்
பதிக்கப்படவேண்டும்
பொன்னேடுகளில்!

கல்வி பொதுவுடைமையாக்கப்பட வேண்டும்
காதல் காதலாய் இருத்தல் வேண்டும்!

வக்கிரம் உமிழும்
பார்வைதனைப் பறிக்க
தனியொரு மின்னல் வேண்டும்!

பெண்மையை கறைப்படுத்தும்
கொடும் பாவிகளை பொசுக்கிட
இரவிலும் சுட்டெரிக்கும் சூரியனொன்று
கடனாய் வேண்டும் !

தாரம் தவிர அனைவரும்
தாயாய் மாறிடல் வேண்டும்!

மங்கையின் மணாளன்
மித்திரனாய் மிளிர வேண்டும்!

கைக்கெட்டும் தூரத்தில்
வாழ்வு வேண்டும்
நெருக்கமாய் ஒரு
தோல்வி வேண்டும்
நெருங்கிப் பழக
உண்மை வேண்டும்!

தனியொரு வானம்
எனக்கென வேண்டும்
கோடி நிலாக்கள்
புன்னகை மொழிய
நட்சத்திர மாலைகள்
நான் அணிய வேண்டும் !

புதுக்கவியில் பூமி
புதிதாய்ப் புலர்ந்திட வேண்டும்
என் கனவுகள் மெய்ப்பட
இனியொரு விதி செய்ய வேண்டும்!!

அ.கார்த்திகா ,
first year -M .E (Applied Electronics ),
Nandha Engineering college,
Erode .

எழுதியவர் : கார்த்திகா AK (17-Nov-14, 8:59 pm)
பார்வை : 3473

மேலே