ஏழைகளின் கண்ணீர் கவலை
வறண்டு கிடக்கும் விலை நிலம் வறட்சியில் பசியில் வாடும் விவசாயி
இவர்களுக்கு உதவிட யார் உள்ளனரோ !
பிச்சையெடுக்கும் பார்வையற்றவர்
அதையும் பிடிங்கி செல்லும் கொள்ளைக்காரன்
இவர் வேறு பிழைப்புக்கு என்ன செய்வார்
பாதுகாப்புக்கு யார் உள்ளனரோ !
கட்டு கட்டாய் கணக்கில் காட்டாத கருப்பு பணம் இருக்கும் இடம் அறிந்தும்
அதை இல்லாதவர்களுக்கு கொடுக்க கஷ்டம் உங்களுக்கு தானோ ( பதுக்கி வைத்திருப்பவர்கள் )
கொட்டி தீரத்த மழை இந்நேரத்திலே
அட
சில ஆண்டுகளுக்கு பிறகு கொட்டி தீர்த்த மழை இன் நேரத்திலே
வெள்ளம் அடைப்பட்டு கிடக்கின்றது ரோட்டினிலே
வீதியில் செல்லும் வாகனமே சேற்றை வாரி அடிக்கின்றது சட்டையிலே
அவனை நான் திட்டி என்ன பயன்
மழையை வெறுத்து என்ன பலன்
ரோட்டை வீட்டை போல் நினைத்து
நனைந்த இடத்தை துடைத்திருந்தால்
இன்று மக்களுக்கும் இப்படி நடக்க வாய்ப்பில்லை
யாருக்கும் மழை காலத்தில் ரோட்டில் நடக்க வெறுப்பில்லை
நான் சொல்ல நினைப்பதில் தவறொன்றுமில்லை
புரியட்டும் உங்களுக்கு மக்கள் படம் துன்பங்களின் கண்ணீர்
அவர்களின் கவலைகளை நான் விளக்குவேன் உங்களுக்கு நாள்தோறும் ஒவ்வொன்றாய் என்றுமே.