உணர்வுகளின் ஊர்வலம் போட்டிக் கவிதை - தேன்மொழி

உணர்வுகளின் ஊர்வலம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
--------------------------------------------------------------------------------------

உற்பத்தி நெஞ்சை நனைக்காமல்
உயிரை குடிக்கும் ஓசையில்
பசுமை வறண்டு அழிந்தது ..!

மதுக்கடையை அரசும் நிறுத்தாமல்
சமூகம் குளிக்கும் போதையில்
குடும்பம் உடைந்து பிரிந்தது ..!

அரசியல் நாடகம் நில்லாமல்
வாக்குகள் விற்கும் புத்தியில்
ஜனநாயகம் வெறுத்து சிரித்தது ..!

சுயநலம் சோம்பல் விரும்பவும்
அன்பை முறிக்கும் நொடியில்
முதியோர் இல்லம் நிறைந்தது ..!

கடற்கரை மணலில் தேகம் உரசி
புனிதம் கரைந்தப் பொழுதில்
காதலும் கண்ணீர் வடித்தது ..!

ஊடக மோகம் முகத்தை மறைக்க
உண்மை ஒளிந்த திரையில்
வியாபாரம் வெகுவாய் விழித்தது ..!

கல்வி திட்டம் கிடப்பில் மூழ்க
சிந்தனை கூர்ந்த அறிவும்
மனனம் ஒன்றால் மலிந்தது ..!

பழைய சட்டம் வசதியை வழங்க
ஊழல் ஒட்டிய விரலும்
உண்மை உருவமாய் உலவுது ..!

பகிர்தல் வெறுத்து உணர்வை ஒதுக்க
இதயம் துடிப்பில் வாழ்ந்த
மனிதம் முழுதாய் மடிந்தது ..!

--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு

எழுதியவர் : தேன்மொழி (17-Nov-14, 8:38 pm)
பார்வை : 128

மேலே