தாய் தந்தை அன்பு
தாய் தந்தை அன்பு என்றும்
நீ பருகும் நீர் போல,
நீரின்றி உன் உயிரில்லை,
உயிரின்றி உன் வாழ்க்கையில்லை.
தாயின் அன்பை பெறு
திறமையுடையவனாவாய்,
தந்தையின் அன்பை பெறு
உழைப்புடையவனாவாய்,
இருவரின் அன்பை பெறு
புகழ்பெற்றவனாவாய்.
பெற்றோர் அன்பு உன்
வளமான வாழ்க்கையின் சூத்திரம்.
பெற்றோர் அன்பை இழக்காதே
அது எங்கும் எவரிடமும்
கிடைக்காத ஒன்று.
கூறு உன் குறைகள் யாவும்
தாய் தந்தையிடம். அவர்களை விட
அன்புடன் என்றும் உன்னை
ஆதரிப்பவர் யவருமில்லை.
என்பதை உணர்ந்து
பெற்றோர் அன்பை
என்றும் பெறுபவனாய் இரு.....................
ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப்பக்கல்லூரி
எலம்பலூர் , பெரம்பலூர்