நூல்களை நேசிப்போம் வாசிப்போம்

நூல்களை நேசிப்போம்.... வாசிப்போம்....
=====================================

கருவுற்ற தாயே சற்றே நீ செவி கொடு
அறிவுள்ள நூல்களை நாளுமே படித்திடு
குழந்தைக்கு கல்வியை கருவிலே புகட்டிடு
புகழ் பெற்று விளங்குவான் பேராற்றலோடு !!!

சிறு பிள்ளை மாணவ செல்வங்கள் கேளீர்
நூலகங்கள் செல்லும் வழக்கமே கொள்வீர் - அறிவு
சுடர் விட தூண்டிடும் நல்ல பல நூல்கள்
நாடியே படித்திட உயர்வுண்டு வாழ்வில் !!!

வாசிக்க வாசிக்க வளர்ந்திடும் பொது அறிவு
வாசிக்கும் போதிலே ஒரு நிலைப்படும் மனது
தியானத்தை வாசிக்கும் போதிலே காண்பாய்
நிதானத்தில் உனை வைக்கும் வாசிப்பை உணர்வாய் !!!

வசதி படைத்திட்ட ஆன்றோரே கேளும் - நீர்
வாசித்த புத்தகங்கள் எளியோர்க்கு தாரும்
ஏழைக்கு நீர் செய்யும் அறிவென்னும் தானம்
வாழ் நாளுக்கும் அதுவே புண்ணியம் என்றாகும்!!!

கணினி வழி நூல்களோ ஏராளாம் ஏராளம்
அது தரும் தகவலோ தாராளம்... தாராளம்....
அறிவினை கூட்டிடும் அறிய பல தகவல்
கண்டறிந்து படித்திடு வாழ்விலுண்டு விடியல் !!!

பிறருக்கு அளித்திடு நீ படித்த நூல்கள்
அலமாரியில் இனி என்ன அதற்கோ வேலைகள்
பண்ட மாற்றென புத்தகம் அளித்திடு
புத்தக செலவினம் நீயதில் குறைத்திடு !!!

நட்புக்கும் உறவிற்கும் நல்வழி காட்டிட
நீ தரும் பரிசெல்லாம் இனி புத்தகங்களாக
வாசித்து வாசித்து ஒளிவீசி திகழ்வோம்
நூலினை பரிசளித்து ஒளி தந்தும் மகிழ்வோம்!!! 

‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡
நேற்று எழும்பூரில் உள்ள இக்க்ஷா மையத்தில் கவி ஓவியா
பத்திரிக்கை நடத்திய கவி அரங்கில் வாசிக்கப் பட்ட கவிதை.
‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

எழுதியவர் : சொ.சாந்தி (17-Nov-14, 8:22 pm)
பார்வை : 713

மேலே