இது தான் இவளின் விதியா
![](https://eluthu.com/images/loading.gif)
இது தான் இவளின் விதியா??
உற்றார் உறவினர் அக்கம் பக்கம் நண்பர்கள் படைச்சூழ அந்த கல்யாண் மண்டபமே சந்தோஷத்தில் கலை கட்டி இருந்து.
அந்த கல்யாண மண்டபத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கும் அத்தனை பேரையும் வரவேற்று கொண்டு இருக்கிறாள் மணமகளின் அம்மா அம்புஜமும் அவளின் கணவர் ராம் குமாரும்...
ஐய்யர் மந்திரம் ஓத மணவறை மனமும் மந்திரமும் கமழ நிறைந்து காணபடுகிறது...
நேரம் ஆகிறது பெண்ன அழச்சுட்டு வாங்கோ..இடையே ஐய்யர்ரின் குரல்...
மணமகனின் அம்மா கோமதி ஏம்மா பொண்ண அழச்சுட்டு வாங்களேன் என்று அவளும் ஒரு முறை கேட்டு கொண்டாள்.
ஏம்மா...ஹேமா சாராதவ அழச்சுட்டு வாயேம்மா...என்று தன உறவு கார பெண்ணை நோக்கி சொன்னாள் அம்புஜம்...
அதன் படி ஹேமா மண பெண் சாராதவை அழைத்து கொண்டு மணவறையில் நிறுத்தினாள்...
மணவறை மரியாதையை என்று மணவறையை மூன்று முறை சுற்றி வருபடி சொன்னார் ஐய்யர்..
அதன் படி மூன்று முறை மணவரையை சுற்றி வந்த சாரதா மணவறையில் அமர்ந்ததாள்..
ஐய்யர் மந்திரங்கள் தொடர்ந்து ஓத ...மாப்பிள்ளை மனோகரும் மணவறையில் பட்டு வேஷ்டியுடன்....
அக்கினிக்கு அட்ஷதைகள் தூவி...கும்பத்தை கை எடுத்து கும்பிட்டு...தாய் தகப்பன்னுக்கு பாத பூஜைகள் செய்து...திருமணம் சாஸ்தர சட்ங்குகளுடன் நல்லமுறையில் போய் கொண்டு இருக்கிறது...
ஐய்யர் முகூர்த்த தேங்காவில் மாங்கள்யம் மஞ்சள் கயறு சுற்றி எடுத்தவராய்...அந்த மண்டபத்தில் கூடி இருந்த அத்தனை பெயர்களிடமும் அட்சதை கொடுத்து அசீர்வாதம் கேட்டார்....
சரியான முகூர்த்த நேரத்தில் மனோகரன் சாரதாவின் கழுத்தில் தாலி கட்டினான்...செல்வி திருமதியானாள் சாரதா..
சாம்பார் ரசத்துடன் கூட்டு பொரியல் என்று தலை வாழை இலையில் வந்தவர்களுக்கு பரி மாறப்பட்டது...
மாப்பிள்ளையின் வேண்டுதல் தனக்கு நல்ல படி கல்யாணம் நடந்தால். கல்யாண ஆனா கையேடு மாலையும் கழுத்துமாய் அங்கு உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு போய் ஒரு கற்பூரம் ஏற்றி விட்டு பிறகு தான் வீட்டுக்கு போக வேண்டும்...
மனோகரன் வேண்டுதல் படி துணைக்கு ஹேமா உடன் ஒரு ஆட்டோவில் கோவிலை நோக்கி சென்றனர்.
அந்த மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு இருபது கிலோ மீட்டர் என்பதால் அந்த கரடு முரடான பாதையில் அந்த ஆட்டோ மெல்ல தான் நகரத்து கொண்டு இருக்கிறது....
தான் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு போக போகும்... வரும் நாட்களை பற்றி கனவு கண்டு கொண்டு அந்த ஆட்டோவில் தன் மாப்பிள்ளையுடன்...
அந்த ஆட்டோவின் குலுகத்தில் மனோகரனின் விரல்கள் அவளை லேசாக வருடுகிறது...ஆட்டோவின் குலுக்கம் கொஞ்சம் என்றால் இவனின் வருடல்கள் தான் அதிகம்....
அந்த வருடல்கள் அவளுக்கு இதமாக தான் இருந்தது.. பதிலுக்கு இவளும் அவனை வருட வேண்டும் என தோன்றியது...பக்கத்தில் இருக்கும் ஹேமாவை பார்க்கும் போது இவளின் விரல்கள் அடங்கி கொண்டது... இன்னும் ஆட்டோ இன்னும் குளுங்காதா???என்று இருவர் மனதிலும் தோன்றி மறைவதற்குள்...
அந்த நேரத்தில் தான் இந்த துயர சம்பவம்...அந்த ஆட்டோவுக்கு எதிரே வந்த ஒரு லாரி அந்த ஆட்டோவின் மோதியது...மண மகன் மனோகர் சம்பவ இடத்திலேயே மாலையும் கழுத்துமாய் மரணம்...
மணகோலத்தில் உள்ள சாரதாவும்..,உடன் வந்த ஹேமாவும் சற்று காயங்களுடன் உயிர் தப்பினர்....
ஊரே துக்கத்தில் ஆழ்ந்து போய் விட்டது.... பார்த்து கதராதவர்கள் இல்லை....அந்த ஊரையே கண்ணிற் நனைத்தது....
அந்த தெய்வத்திற்கு கண் இல்லையா??அட பாவமே...
கோமதியின் கண்ணிற் பெருகி ஓடுகிறது... எல்லா உறவுகளும் அருகில் இருந்ததால் அவளை சமாதான படுத்த பெரும் பாடு படவேண்டிய நிலை ஏற்பட்டது... அப்படியும் அவளை சமாதான முடியவில்லை......
மணகோலத்தில் கோவிலுக்கு போனவன் பிணமாக வீடு திரும்பினான்...மனோகர்...
மணகோலம் கூட கலையாத சாரதாவின் வாழ்கையில் விதி விளையாடி கொண்டு இருக்கிறது...
இதோ பாருங்க உம் பொண்ண எம் புள்ள கை புடுச்ச நேரம் எம் புள்ள புணமா வீடு வந்து சேர்த்துட்டான்.. கோமதி,அம்புஜத்தை நோக்கி...
முறைப்படி எம் புள்ள தொட்டு தாலி கட்டினதால....பதினாறு நாள் இருந்து எம் புள்ள கட்டின தாலிய அறுத்து கர்மாத்திரம் பண்ணிட்டு தான் போகணும் என்று மனோகரனின் அம்மா கோமதி ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டாள்....
சின்ன பொண்ணுமா இந்த வயசுல தாலிய அறுத்து..சொல்லவே முடியாமல் துக்கம் அம்புஜத்தின் தொண்டையை அடைக்கிறது...அங்கு கூடி இருந்தவர்களில் நாலு பேர் மனசாட்சியுடன் சொல்லித்தான் பார்த்தார்கள்....
எதற்கும் செவி சாய்பதாக இல்லை கோமதி....
சுண்டி விரல் மட்டும் பிடித்த பாவத்திற்கு...
இவ்வளவு பெரிய தண்டனையா??? வச்ச பூ கூட வதங்கல...,கட்டிய கூரை புடவை கூட கசங்கல,…நெத்தியில வச்ச குங்குமம் மங்கள.... மணவறையும் கலையல...வந்த ஜனமும் திரும்பல....இப்படி ஆளுக்கொருவராய்... அவர்களின் துக்கத்தை வெளிபடுத்தினார்...
அந்த கூடத்தில் நாலு பேர்...
இவ எந்த நேரத்துல பிறந்தாலோ...எந்த நேரத்துல சமஞ்சாலோ...சனியன்... பீட...தரித்தரம் பிடித்தவள் என்று மனச்சாட்சி இல்லாமல் வார்த்தைகளை அள்ளி அந்த கூட்டதிலும் கொண்ட்டினர்...
என்னதான் கொடும் பாவியா இருந்தாலும் கடவுள் இப்படி ஒரு விதியா போடுறது...என்று நாலு பேர் கடவுளை திட்டினார்....
காரியம் முடியும் வரை இந்த பதினாறு நாள் மனோகரனின் வீட்டில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஆகி விட்டது.... சாரதாவிற்கு...
தன் மகளை இந்த கோலத்தில் அவளை விட்டு பிரியாமல் அம்புஜமும் சாரதாவிற்கு துணைக்கு இருந்து விட்டாள்..... மனோகரனின் வீட்டில்...
நரக வேதனையுடன் இந்த பதினாறு நாளும் அவர்களை விட்டு போனது.......
அன்று தான் அந்த பதினாறு.....
பூவும் போட்டும் வைத்து அழகு பார்த்த அந்த அழகு தேவதை சாரதாவுக்கு.....
அவளின் தலையில் உள்ள பூ வை பரித்தெரிந்த்தால் ஒருத்தி,,..அவளை கை வளையலை உடைத்தெரித்தால் ஒருத்தி,….அவளின் நெத்தி பொட்டை துடைத்தெரிந்தால் ஒருத்தி....,அவளின் தாலியை அருத்தெரிந்த்தால் ஒருத்தி.....இப்படியாக சாராதவை ஒரு வெள்ளை சேலைக்குள் நிறுத்தினாள் ஒருத்தி..... அவளின் நெத்தியில் விபூதியை திட்டினால் ஒருத்தி... பூஜை அறையில் அமரவைத்தாள் ஒருத்தி....
இதெல்லாம் பார்த்த அம்புஜம் ஆடி போய் விட்டாள்... இதயமே நின்று விடும் போல் இருந்தது அவளுக்கு...
குளித்த ஈரம் கூட காயல....தன் மகளை அழைத்து கொண்டு வீடு திரும்பினால் அம்புஜம்.....
ஊரார் இவளுக்கு கொடுத்த பெயர் விதவை இளம் விதவை....
சில பேர் பார்வைக்கு இவள் ஒரு பாவம்..சிலரின் பார்வைக்கு இவள் ஒரு தரித்தரம் பிடித்தவள்.... இவள் முன்னால் வந்தாலே காரியம் விளங்காது... முண்டச்சி மூலையில் இருக்க வேண்டியவள்....எந்த நல்லது கெட்டதுக்கும் முன்னாள் வர கூடாது....
மறுமணம் செய்யலாம் என்றால் இவள் இரண்டாம் தாரம்... வயதானவர்கள் தான் இவளை பெண் கேட்டு வருகிறார்கள்....
இந்த இருபது வயதில் இவளின் எல்லாம் வாழ்க்கை அத்தியாயமும் முடித்து விட்டது....
இது தான் இவளின் விதியா??