ஈரத் தீ –பொள்ளாச்சி அபி
உயிருக்கு உரம் தேடி
பயிருக்கு வரம் தேடும்
பாமரவிழிகளில் ஈரத் தீ..,
பசியெறிக்கும் வயிறுக்கும்
ருசியுணரும் வாக்குக்கும்
இடையெறியும் ஈரத் தீ..,
முரணுக்கு இடமளிக்க
அறத்திற்கு காப்பளிக்க
இருவேடமிடும் ஈரத் தீ..,
முல்லைப் பெரியாறில்
மேகதாது காவிரியில்
தேக்கப் படும் ஈரத் தீ..,
கங்கையொடு காவிரியை
சங்கமிக்கும் காலம்வரை..,
ஈரமிருந்தாலும் அது தீ..!
----இத் தலைப்பில் எழுத,தங்கள் படைப்புகளால் உத்வேகமூட்டிய தோழர்கள் கலை,சரவணா,ஆகியோருக்கு நன்றி.----
அன்புடன்
பொள்ளாச்சி அபி