முகங்கள்
கண்ணாடியில் பார்க்கையில்
தெரிகின்ற முகம்
உன்னுடையதுதான்..!
மனக் கண்ணாடியில் பார்..
அதில் நீ தெரிகின்றாயா என்று..
அதில்தான் எத்தனை எத்தனை
முகங்கள் உனக்கு ..
தெரியும் உற்று நோக்கினால்..!
உன் குணங்களே ...
முகங்களாய்..!
தெரியும் ஒரு முகம் கூட
உன்னுடையது அல்ல..
உண்மையில் அவை நீ அல்ல..
கொஞ்சம் கொஞ்சம்
என பலரது முகங்கள் அதில் கலந்து
ஒவ்வொன்று தெரிகிறதா..?
உன் தந்தையின் குணம்..
தாயின் குணம் ..
நண்பனின் குணம்..
மூதாதையர் சிலர் குணம்..
நல்லவன் குணம்..
நச்சுப் பாம்பின் குணம் ..
அதிகாரத்தின் முன் அடங்கிப் போகும் குணம்..
இயலாமையினால் தனியறையில்
போராடும் குணம்..
போராளியின் குணம்
இரக்கவானின் குணம்..
இறைவனின் குணம்..
..
என்று நீ காணும் குணங்களே
உன் முகங்களாய்
தெரிகிறதா..
உனக்கென்று ஒரு முகம்
இதில் ஏதேனும் இருக்கிறதா?
உண்மையில் நீ
இவை எதுவும் இல்லை என்பது புரிகிறதா?
..
இல்லைஎன்றறிந்த பின்
தூக்கி எறிந்திடு
சில முகங்களை..
எப்போதும் எனக்கு
இவை வேண்டாமென்றே !
வைத்துக் கொள் ஒன்றிரண்டை..
உன்னுடனே..
வசீகரமானவைகள்
மட்டுமே
அதில் இடம் பெறட்டும்..!