பொங்கி எழு

முன் குறிப்பு: ஜின்னா அவர்களின் எழுதும் முறையால் கவரப்பட்டு ஷர்மா எழுதியதிற்கு, திரு ஜின்னா கொடுத்த கருத்து விரிவுரையால் கற்றுக்கொண்டு நான் எழுத முயற்சித்தது. நிறை இருப்பின் கற்றுகொடுத்த ஆசான் கவிஞர் ஜின்னாவையே சேரும்...
=================================================
(மேலும் திரு ஜின்னா கூறிய திருத்தங்களால்
கவிதை புதுப் பொலிவுடன்) - நன்றி கவிஞர் ஜின்னா அவர்களே.
=============================================
பொங்கி எழு
------------------

புரிதல் இல்லா உலகம் இங்கே
-------- நேர்மை எதிலும் இல்லையடா - நீ
சரிதான் போ என விட்டுவிட்டால்
-------- நாளும் வளரும் தொல்லையடா

களைகள் படர்ந்து வளர்ந் திருக்கும்
-------- அதுவே பயிரென காட்சிதரும் - நாம்
விளையாட்டாய் அதை வளர விட்டால்
-------- அதுவே நமக்கு வீழ்ச்சிதரும்

பொய்கள் நிஜங்களை மறைத் திருக்கும்
-------- உண்மை வாடி தளர்ந்திருக்கும் - நீ
கொய்ததை வீழ்த்தி சாய்த்து விட்டால்
-------- துன்பம் எங்கே வளர்ந்திருக்கும்

ஆலாய் வளர்ந்து வேராய் நிற்கும்
-------- விஷமாம் கொடிய லஞ்சமதை - நாம்
வேலால் குத்தி உயிரை அறுத்து
-------- தீர்ப்போம் அதன் வஞ்சமதை

அரசியல் பிழையின் அறமே கூற்று
-------- நடைமுறை என்று விதிசெய்வோம் -நீ
மரமாய் நின்றால் அவரே நாளை
-------- அறங்கா வலராய் சதிசெய்வோர்.

பின் குறிப்பு: கற்றுக்கொள்வதற்கு வயது தடை இல்லை ....

--முரளி

எழுதியவர் : முரளி (18-Nov-14, 3:08 pm)
பார்வை : 121

மேலே