ஏனோ
உனை பார்த்த என் மேகம்,
தரை தொட்டது ஏனோ?
உனை பார்த்தால் என் தேகம்,
பூ பூப்பது ஏனோ?
பெரிதாய் ஒரு சாரல் எனை
நனைப்பது ஏனோ?
புதிதாய் என் நெஞ்சம்,
உனை சுமப்பது ஏனோ?
எதிரே வரும் நபரெல்லாம்,
உன் சாயல் கொள்வது ஏனோ?
என் கனவெல்லாம் கூட
நீ நிறைவது ஏனோ?
ஏனோ ? ஏனோ ? என்ற,
இந்த கேள்விகள் இன்று
புதிதாய் பிறந்தது
ஏனோ ??? :-)

