வேண்டாம் போய் விடு பெண்ணே
நம் பழைய நாட்களை பற்றி
நினைக்கும்போது மலரும்
புன்னகையை கெடுத்துவிடாதே ...
நம் நாட்கள் பொய்யானவை என்று
நான் புரிந்து கொண்டேன் ...
ஆனால் அது தவறு என்று சொல்லி
என்னை சமாதானப்படுத்தி கொள்கிறேன் ..
நீயாக வந்து உண்மையை சொல்லி விடாதே ...
அழகான நினைவுகள் அழகாக இருக்கட்டும் ..
இதயம் சில நாட்களுக்கு ரத்த ஓடத்தை மட்டும் கவனிக்கட்டும் ...
வாழ்கை வெருமையிலாவது நகரட்டும் ...