மூன்று எழுத்து மரம் - மறவாதீர்

மண்ணோடு அசையாமல் இருக்கும் நீ
பூமி எங்கும்
பூ மழை பெய்ய வைக்கிறாய் !

சிறு வயதிலோ நீ
செடி பிறகு
சிரியதில்லை உனது
கிளை !

காடாக இருந்தாலும்
கள்ளத்தனமாக ஒற்றையாய் இருந்தாலும்
காணாத இன்பத்தை நீ
தருகிறாய் வெய்யிலில் !

மன் மத
ரத்தத்தில்
வரும்
காற்றாய்
மந்திரமாய்
தருகிறாய் !

மனிதனின் உடல் மண்ணிற்கு
உங்களின் சிலர் உடலோ மனிதனுக்கு
மண்ணின் மைந்தன் மரங்கள்
மலையின் வேந்தன் நீங்கள் !

உற்சாகமாய் எழுப்பும் உங்கள் பூக்கள்
உள்எழுச்சியை உணர்த்தும் உயிர்கள் !

என்னை உணர்த்தும் உயிர் இல்லையேல் நான் இல்லை !
நீ இல்லையேல் நீர் உலகம் இல்லை !

மனதில்
மறையாது இருக்கும்
மாணிக்கத்தை
மரத்தை

உலகில்
உயிர் பெற
உள்ளளவு நினைத்து
உடலளவு செயல்பட்டு
உயிர் விதை விதைத்திட
உறுதி
உரைப்போம்
உன்னமையாக !!

எழுதியவர் : சந்தான லக்ஷ்மி க (19-Nov-14, 6:46 pm)
பார்வை : 121

மேலே