உறுதிகொள்வோம்

வாழ்வளிக்கும்
வள்ள லவளை
வளம்கெடுத்து
சிதைகின்றோம்

எதிர்ப்பில்லா
இனியவளை
எதிரியாக்கி
வருகின்றோம்

கொல்லையாக
காடாக கிடப்பவளை - நிதம்
கூறுபோட்டு
விற்கின்றோம்

நேசத்திலே ஏந்துபவளை
நெகிழாமல் காப்பவளை
நெகிலிக்கயிற்றினால்
கொள்கின்றோம்

இருக்கும்போதும்
இறந்தபின்னும் - நமை
இதமாய் தாங்குபவளை
இரும்பு மனம்கொண்டு
துவம்சம் செய்கின்றோம்

தாய் என்ற அவளுக்கு
சேய் என்றில்லாமல்
பேயென குருதியினை
உறிஞ்சுகின்றோம்

உழுக வளைந்துகொடுப்பவளை
உணவளிக்கும் தூயவளை
உருக்குலைய செய்யாமல்
உயிர்காத்திடுவோமென
உறுதிகொள்வோம் ....

எழுதியவர் : யாழ்மொழி (20-Nov-14, 4:17 pm)
பார்வை : 115

மேலே