நீ எங்கே என் உயிரே

நீ எங்கே ...?
வந்து சேர்ந்துவிடு என்னிடம்!
என் காதல்...
என்றும் இருக்கும் உன்னிடம்...!
என் உயிரே...
உள்ளுக்குள் உன் நினைவே...!
என் இதயத்தில்
என்றும் உன் துடிப்பே...! அன்பே!
கனவாகி போனாய் நீயே...
நீ கலைந்து விட கூடாதென
கண் மூடியே கிடக்கிறேன் நானே!
மூச்சாகி போனாய் நீயே...
உள்ளே இழுத்த உன்னை
விடமுடியாமல்...
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரையே விடுகிறேன் நானே...!
உன்னை ஒருமுறை பார்ப்பேனோ...?
என் காதலை
உன் காலடியில் சேர்ப்பேனோ...?
நீ என் பெயரை உச்சரிக்க...
ஒருமுறை நானும் கேட்பேனோ...?
உலகில் ஒருநாள் நான்...
உனக்காய் மட்டும் வாழ்வேனோ...?
உன் முகம் பார்த்தே
இருந்த விழிகள்...
உன் மொழி கேட்டே
மகிழ்ந்த செவிகள்...
உன் விரல் பிடித்தே
சிலிர்த்த கைகள்...
உன்னை தேடியே
நடந்த என் கால்கள்...
உன்னை காதலித்த
என் ஒவ்வொரு அணுக்களும் ...
உனக்காய் துடிக்குதுதடி...
உயிரே...
உள்ளிருந்து வெடிக்குதடி...!
இனி வரும் என் பொழுதுகள்...
உன்னுடன் இல்லை...
நீ கொண்ட காதல் விழுதுகள்...
என்னுடையதில்லை...
என்பதை...
எண்ணி பார்கவே
என்னால் முடியவில்லையடி...!
நான் கண்விழித்து
காதலித்த இரவுகள் ...
எனக்கு மட்டும்
இன்னும் விடியவில்லையடி ...!
உதட்டில் பொய்யாய் சிரிப்புடனும்...
உள்ளே உந்தன் நினைபுடனும்...
போலியாய் தினம்தினம் வாழ்கிறேனே...!
வலியால் நொடிநொடி அழுகிறேனே...!
நீ எங்கே ...?
வந்து சேர்ந்துவிடு என்னிடம்!
என் காதல்...
என்றும் இருக்கும் உன்னிடம்...!
இவன்,
நிலவின் நண்பன்!

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (20-Nov-14, 4:19 pm)
பார்வை : 132

மேலே