அவள்மொழி நினைத்திரு

தனித்திரு
விழித்திரு
அவள்மொழி நினைத்திரு
அருகருகாய் அவள்மொழியாய் அகழ்விழியாள்
தீவாலைகள் வீசிக்கொண்டிருந்தாள்
நெடிப்போல என் நெஞ்சுக்கூடு வரை
அவள் சுவாசம் வருடிக்கொண்டிருந்தாள்
அவளில்லை அதுத்தெரிந்தும்
அவளாகவே பார்வை பிழையாகின்றன.
எங்கேனுமொரு சாலையில்
எதிர்ப்பாரா சந்திப்பில்
அவளாய் இருக்குமானால்
விபத்து வியப்பாகிறது.
அந்நிமிடம் அந்நுகம்
அக்கனமே சேமிப்பாய் உறைந்துப்போகின்றது.
அயரந்துக்கிடக்கும் கூட்டுக்குள்ளே
அறுந்துக்கிடக்கும் உன்னசைவோட்டங்களை
மீட்பதறியாது மூழக்கிப்போகிறேன்
ஏதேனும் எவரேனும் எழுப்புகின்ற அதிர்வுகளின் பின்னூட்டங்களை நினைவோட்ட நீயென்ற உன்னிலேயே முடிவுறுகிறது.
தேடிச்சென்று திசைகள் மறந்துப்போனேன்
ஆழித்துளையில் அகண்ட தூணிப்போல்
வாழ வழுக்கிப்போனேன்.
தீவாசம்போல் என்சுவாசம் முட்டுகின்றன
எங்கே உன் வாசம் ஆசுவாசமிட்டடும்
உன் மூச்செரித்துப்போகும் உஷ்ணக்காற்றில்
காற்றுக்கருகி என் காதல் எரிகிறதடி!
அவள்போல் சொல்வதற்கில்லை
அவளாய் சொல்வதற்கில்லை
இதுபோல் வழிந்துக்கிடக்கும்
நினைவெண்ணெய்கள் தான்
என் காலச்சக்கரத்தினை சுற்றவிடுகின்றன.
என் காதல் கலைத்தாய்
என் காதலை கலைத்'தாய்(ள்)
நீராவித்துகள்ப்போல என் அதரங்களெல்லாம்
பூத்துக்கிடக்கிறாய்
எத்துணை விசிறிகள் கொண்டு
இத்துளி நினைத்தூறல்களை துரத்துவேன்.
எவ்விடம் நின்றாலும்
அவ்விடம் நிற்கிறது நினைவகமாக,
தீவிரமெனதை அறியாமல்
தினமொரு இம்சையை வழங்கிறாய்
மீண்டுமொரு சந்தர்ப்பத்தில்
காதலியாய் நீ வேண்டாம்
இவ்வலி போல் அதுவும் உண்மையாகுமா?

எழுதியவர் : ராமசந்திரன் j (23-Nov-14, 1:14 am)
பார்வை : 164

மேலே