சின்ன புத்தி காரன்

சின்ன புத்தி காரன்!!!

அம்மா என்ன செய்வியோ ஏது செய்வியோ.....எனக்கு ஆயிரத்து ஐநுறு வேணும்....இந்த பணத்தே காட்டாட்டி இந்த வருஷம் பரிச்சை எழுத முடியாதும்மா.... போன வருஷமும் பணம் கட்டலன்னு தான் பரிச்சை எழத முடியமா....போச்சு.... எங் கூட படுச்சவங்க எல்லாம் போலீசா வேலை செச்சுட்டு இருக்காங்க...
இந்த வாட்டியும் முடியலன்னா....என்னால அடுத்தவருஷம் வரை காத்திருக்க முடியாது...என்று மூச்சு விடாமல் அவன் அம்மாவிடம் கேட்டு கொண்டான் தினகரன்.....
சரி.... ப்பா.....எப்படியாவது உருட்டி பெரட்டி தரேன்.....என்ன செய்றது கடவுள் கஷ்டத்த மட்டும் தான் நமக்கு பரிசா கொடுத்திருக்கான் அந்த கடவுள்...என்று சலித்து கொண்டு சொன்னாள் அவனின் அம்மா சுந்தரி...
தினமும் காட்டு வேலைக்கு போனாத்தான் அவளின் வீட்டில் அடுப்பெறியும் .அடுத்தவேளை கஞ்சிக்கே கேள்வி குறியோடு இருப்பவள் சுந்தரி எப்படி தான் மகன் கேட்ட பணத்தை ஏற்பாடு செய்வாள் புரியவில்லை...
அவளின் அம்மா அன்னம்மா சரியான பழுத்த பழம் வயது எண்பதை தாண்டி கொண்டு இருக்கிறது....வீட்டில் இருந்த படியே அரிசி கேதுமை கம்பு கேழ்வரகு என்று புடைத்து கொடுத்து ஏதாவது ஒரு வேலை செய்து தினமும் சம்பாரித்து விடுவாள் அந்த கிழவி...தன் சம்பாரிக்கும் பணத்தை கூட சுந்தரியிடம் தான் கொடுத்து விடுவாள்...
சுந்தரியும் அம்மா விடம் ஏதாவது பணம் வைத்திருந்தாள் கொடுக்கும் படி கேட்டாள்...
அந்த அன்னம்மாள் தன முத்தானையில் முடிந்து வைத்திருந்த ஒரு ஐநூரு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தாள்....
இன்னும் ஆயிரம் வேண்டும்...
யாரிடம் கேட்பது என்று யோசித்தபடி இருந்தாள் சுந்தரிக்கு..ஒரு பிடியும் கிடைக்க வில்லை..
நாளைக்கு தான் கடைசி நாள்....நாளை பணம் கட்டாவிட்டால் அந்த பரிச்சை எழுதமுடியாது..தினகரன் பணகேட்டு தொந்தரவு....
சுந்தரியும் எல்லோரிடமும் பணம் கேட்டு பார்த்து விட்டாள்..எங்கு கிடைக்க வில்லை....
அந்த ஊரிலே பெரிய வீடு என்று எல்லோராலும் அழைக்கப்படும்... ஐம்பது வயதை தாண்டிய அன்பழகன்....பணக்காரன் என்றால் அந்த ஊரிலே அவனைத்தான் சொல்ல முடியும்....சரி அவனிடமாவது கேட்கலாம் என்று யோசித்தவள்....
அந்த பெரிய வீட்டை நோக்கி நடந்தாள் சுந்தரி....
வீட்டு வெளி திருனையில் அமர்த்திருந்த அன்பழகனை நோக்கி விவரத்தை சொல்லி பணம் கேட்டாள்....
அவன் இவள் கேட்ட பணத்தைவிட அதிகம் தருவதாக சொல்லி அவளை அவன் ஆசைக்கு இனங்கும்படி....சொன்னான்...
இதை கேட்டது அவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை......இலுத்து சொருகிய முத்தானை உடன் இடுப்பின் மீது கை கொண்டு....
ஏய்யா....உனக்கு எங்கள மாறி ஏழைகளை கண்டா இளக்காரமா??? ஏதோ ஊர்ல பெரிய மனுசனாச்சே....பெரிய மனசு இருக்கும் நினச்சுட்டு உதவி கேட்டு வந்தேன்...இப்படி ஒரு சின்ன புத்தி இருக்கும்முனு...ச்...சீ... நீ பெரிய மனுசனா....நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலையா...என்ன மனுச ஜென்மயா???.... நீ???
எம் புருஷன் என்ன விட்டு போய் இந்த ஆறு வருஷத்துல மனசார யாரையும் நினச்சு கூட பார்த்து இல்ல...என்று சற்று கோபத்துடனும் கடுமையாக பேசி விட்டாள் சுந்தரி...
என்ன சுந்தரி ஒரு போதும் இப்படி பேச்சமாட்டாளே....என்று அந்த வழியாக போய் கொண்டுருந்த தெரு கோடி கணேசன்...சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்தவாறு....
என்னமா சுந்தரி என்று கணேஷன் கேட்க்க...
இல்லன்னா என்று ஆரம்பித்தவள்....தன் முத்தானையால் தன் முகத்தை துடைத்து கொண்டு விபரத்தை சொன்னாள் சுந்தரி...
இதை கேட்ட கணேசும் சற்று கடுமையாகத்தான் பேசினான்....பெரிய வீட்டு காரன் என்று கூட பார்க்காமல் எச்சரிக்கை செய்து விட்டு....
சுந்தரியை நோக்கி....இதோ பாரும்மா உனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தானே வேண்டும்....நான் தருகிறான் பிறகு வந்து வாங்கிகோ... இல்ல நானே கொண்டு வந்து தரேன்... என்று அவளை சமாதனம் செய்து அனுப்பிவிட்டு போய் விட்டான்...
வீட்டை நோக்கி வந்த சுந்தரி...வீட்டின் உள்ளே நுழைந்ததும்...அவளால் ஆத்திரத்தை அடக்கி கொள்ள முடியாமல் ஓ...என்று ஒப்பாரி வைத்து அழ தொடங்கி விட்டாள்....
தினகரனும் அவன் அம்மா விடம் கேட்டு பார்த்தான் ஒன்றும் சொல்லாம் கண்ணீரை மட்டும் அள்ளி தேளிகிறாள் சுந்தரி....
அன்னம்மா கிழவி கேட்கும் போது தான் விவரத்தை சொன்னாள்....
இதை கேட்டு கொண்டுறிந்த தினகரனுக்கு ஆத்திரம் தாங்க முடியாமல்....
வெட்டுவதாகும்..குத்துவதாகும் சொல்லி ஒரு ஆர்பாட்டம் செய்தான்....
அவனை அன்னமாலும்,சுந்தரியும் தடுத்து நிறுத்தினர்.....என்னால தனம்மா உனக்கும் இப்படி ஒரு நிலைமை என்று தனக்குள் புலம்பி கொண்டு அழுகையும் கண்ணீருமாய் வாசலில் வந்து அமர்த்தான்....
அந்த நேரம் கணேசன் ஆயிரம் நோட்டுடன்...சுந்தரியை அழைத்தவனாய் அவள் வீட்டு வாசலில்...
சுந்தரியும் அழுது முகம் வீங்க வெளியே வந்தாள்..
கணேஷ் கொடுத்த அந்த ஆயிரத்தை வாங்கி கொண்டு.... சுந்தரி... தலை கவிழ்து நின்றாள்.
அவளை ஏறிட்டு பார்த்த கணேஷ் கவலை படாதேம்மா....இந்த மாறி ஊர் பெரியவர்கள் என்று சொல்லி கொள்ளுறது பெரிய விஷயம் இல்லை பெரிய புத்தியோட இருக்கணும்....சின்ன புத்தி படைத்த பெரிய மனுஷன்....
சரி... சரி....நடக்குற காரியத்த பாரு....என்று விடை பெற்று நகர்ந்து விட்டான்....கணேஷ்...
இருந்தாலும் தினகரனின் மனதில் ஆணி அடித்தார் போல் இருந்தது.....அந்த பெரிய மனுசனை பார்க்கும் போது எல்லாம் அவனை இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவன் மனதில் கிடந்து அறியாய் அரித்தது....
இவன் பரிச்சை எழுதும் வரை காத்திருந்தான்....
அவன் எழுதிய பரிச்சையில் தேர்ச்சி பெற்று..வேலையும் கிடைத்தது....அந்த கிராமத்தின் அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் போலீஸ் வேலை.....
அந்த கிராமத்திலயே தினகரன் தான் முதல் அரசு ஊழியரும் முதல் காவலாளியும்...இதுவே அந்த கிராமத்திற்கு மிக பெரிய பெருமை....
வேலையில் சேர்ந்த உடன் இவன் செய்த முதல் காரியம் அந்த பெரிய வீட்டு பெரிய மனுஷனை பழி வாங்க இவனின் மனம துடியாய் துடித்தது....
கொஞ்ச நாளாவே அவன் மீது தினகரனுக்கு ஒரு குறி வைத்த பார்வை....
இவன் நோட்டம் மிட்டதில் பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு இளம் வயது பெண் அடிக்கடி சந்திக்க வருகிறாள்...சரி என்று தன் மனதில் நினைத்து கொண்டு இன்னும் இவனின் நோட்டத்தில் உறுதியும் கவனமும் நிறைந்து இருந்தது.
வழக்கம் போல் அன்று அந்த பக்கத்து கிராமத்து காறி அந்த பெரிய மனுசனை சந்திக்க வந்தாள்.....அவள் வந்த சிறிது நேரத்தில் அந்த பெரிய விட்டின் பின் புறம் உள்ள வீட்டினுள் நுழைந்து கதவு மூடப்பட்டது....
இதை எல்லாம் நோட்டம்மிட்டவனாய்....அந்த கிராமத்தில் உள்ள சில பெருசுகளை அழைத்துக்கொண்டு அங்கு வந்தான் தினகரன்....
அந்த பெருசுகளின் ஒருவரை அந்த கதவை தட்டும் படி சொன்னான் தினகரன்....
அதன் படி அந்த கதவை தட்டியவுடன் கதவை திறந்தான் அந்த பெரிய மனுஷன்....அவனுக்கு பின்னால் ஒரு பெண் அரை குறை ஆடையில் அந்த காட்சியை பார்கவே அங்கு உள்ள எல்லோர் முகமும் சுழி வுடன்.... இருந்தது....
இந்த விஷயம் பஞ்சாயத்து வரை வந்தது...
அந்த பஞ்சாயத்தில் அந்த பெரியமனுசன் கூனி குறுகி போய் அங்கு கூடி இருந்த அத்தனை பேர் முன்னிலையிலும் நிறுத்த பட்டு இருந்தான்.....
அங்கு கூடி இருந்த மக்களும் விவரத்தை சொல்லி....இத்தனை நாளும் பெரிய மனுஷன் பணக்காரன் என்ற திமிர் பிடித்து நம்மல எல்லாம் ஏமாத்தி திரிந்த இவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேணும் என்று எல்லோரும் ஒரு மொத்தமாய் தீர்மானித்து....
இத்தன நாளா மானத்துக்கு பயந்துட்டு வெளியே சொல்லாம இருந்தோம்..
ஆம்மாம் என்கிட்டயும் தப்பா நடக்க பாத்தான்.இந்த சின்ன புத்தி காரன் என்று அந்த கூட்டத்தில் நாலு பெண்கள் சொல்ல....
அன்பழகனுக்கு அவமானம் தாங்க முடியல...

ஊரை வீட்டு ஒதுக்கி வைக்க சொன்னார்கள்....
அதன் படி ஊரை விட்டு ஒதிக்கி வைத்தனர்....
அவன் அருகில் நின்று கொண்ருந்த பக்கத்துக்கு கிராமத்தின் பெண்ணும்....நான் ஒரு முறை இவரிடம் கடன் கேட்டு வந்த இடத்துல என்னை தப்பா பயன் படுத்திட்டாருங்க....அதுல இருந்து நான் இவருக்கு அடிமையா ஆயிட்டேன்....எனக்கு பண பசி.... அவருக்கு உடல் பசி..... என்று சொல்லி நிறுத்தினாள் அந்த பெண்....
பக்கத்து கிராமத்து பெண் என்பதாலும் அவள் ஒரு பெண் என்பதாலும் அவளை இந்த கிராமத்துக்குள் இனி வரகூடாது என்று எச்சரித்து அனுப்பினர்....

முற்றும்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (23-Nov-14, 11:12 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : sinna puthi kaaran
பார்வை : 220

மேலே