கதையில் ஒரு விடுகதை

கதையில் ஒரு விடுகதை!!!
இந்த கதையில் வரும் விடுகதைக்கு....பதில் கொடுத்து இரண்டு ஜோடிகளை வாழ வைக்க எழுத்து வாசகர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.....
நீங்கள் கொடுக்கும் பதிலில் இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்பத்தை மறந்து விட வேண்டாம்...
வேலம்மா பாட்டி தொண்ணுறு வயதை கடந்து இருந்தாலும் நல்ல ஆரோகியமான உடல் வாகு கொண்ட பாட்டி....கண் பார்வையில் நல்ல தெளிவு..வீறு நடை... ஒரு பல் கூட விழவில்லை...நல்ல திடகாத்திரமான பாட்டி.... தலை மட்டும் பஞ்சை போல் வெளுத்திருந்தது.....
அந்த கமலூர் கிராமத்திலேயே அந்த பாட்டியை ஒரு தெய்வமாக கருதுகின்றனர்....
இந்த பாட்டிக்கு பேரன், பேத்தி,கொள்ளு பேரன்,கொள்ளு பேத்தி என்று ஐம்பது பேர் கொண்ட அஞ்சு தலைமுறையை பார்த்த பாட்டி வேலம்மா....
வேலம்மா பாட்டி படிப்பறிவு இல்லா விட்டாலும் பகுத்தறிவில் கெட்டிக்காரி....
அந்த கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்டதை இந்த பாட்டி இடம் கேட்டகாமல் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்....
வேல்லம்மா பாட்டி சொல்வது தான் சட்டம்..
வேல்லம்மா பாட்டியின் ஒரு கொள்ளு பேத்தி ராணி. ராணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி கணவன் இறந்து விட்டான்..இளம் விதவை...ஏதே கொஞ்சம் படித்திருந்ததால்...மேற்படிப்புக்காக வெளி ஊர் சென்று படிக்க போய் விட்டாள்.... போய் இரண்டு வருஷம் ஆகியும் திரும்பி வரவில்லை....
வர பொங்கலுக்கு வருவதாக சொல்லி இருந்தாள்.....
வேல்லம்மா பாட்டிக்கு ராணியை பார்க்க மிகுந்த ஆவல்....
அந்த கொள்ளு பேத்தி ராணியும் அவளுடன் அவளின் காதலன் கோபி என்று அறிமுகம் செய்தவாறு அந்த பாட்டியிடம் அந்த வாலிபனை காண்பித்தாள்.....
இதை கேட்டது அந்த கிழவிக்கு கோபம் பொங்கி எழுந்தது....
ஊர் கட்டுப்பாட்டை மீறி தன் கொள்ளு பேத்தி ராணி செய்த காரியம் அந்த பாட்டிக்கு தலை குனிவை ஏற்படுத்தியது.....
போன வருஷம் அந்த தெரு கோடி சண்முகத்தின் மகள் திவ்யா... அவளும் ஒரு இளம் விதவை....
அடுத்த கிராமத்தில் உள்ள சேகரை காதலித்தாள் என்ற காரணத்திற்காக....
அந்த கிராமத்தின் மக்கள் முன்பு அவளை அவமானம் படுத்தி....அவள் அவமானம் தாங்க முடியாமல்.... வெளியே வராமல் வீட்டில் அடைந்து கிடக்கிறாள்....... தற்கொலைக்கு கூட முயற்சித்தவள் திவ்யா... தனக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்து கூனி குறுகி விட்டாள்............
இப்போது தன் கொள்ளு பேத்தி காதலனுடனே....அந்த கிராமத்தில் கால் பதித்து விட்டாள்.
என்ன நடக்குமே....அந்த கிராமத்திலுள்ள எல்லோர்க்கும் பயம் கலந்த எதிர் பார்ப்பு.....
அந்த வேலம்மா பாட்டி அந்த பொங்கல் திரு நாள் கழிந்த மறு நாள் அந்த கிராமத்து மக்களை அந்த ஊர் அம்மன் கோவிலுக்கு வரும் படி உத்தரவு கொடுத்தாள்....
அதன் படி ஊர் மக்கள் எல்லோரும் அந்த கோவிலில் ஒன்று கூடி விட்டனர்..
ராணி மற்றும் கோபியை அழைத்து கொண்டு... அந்த கோவில் முன்பு.... வேலம்மா....
நம்ம ஊர்ல இது வரை நடக்க கூடாதது... எல்லாம் நடத்துட்டு வருது.....இது வர விதவைகள் விவைகளா... தான்... வாழனும்...இது தான் காலம் காலமா நடந்துட்டு இருக்கு....இப்ப இந்த சிறுக்கிகள்....இப்படி ஒரு காரியத்த பண்ணிட்டு வந்து நிக்குதுங்க.....
வேலம்மா பாட்டின் கணீர் குரலில்...தான் கொள்ளு பேத்தி செய்த தவறுக்காக அவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் இல்லாவிட்டால் நீங்களே ஒரு தண்டனை சொல்லுங்க என்று அங்கு கூடி இருந்த அனைவர் முன்பிலும் கோப பார்வையுடன் முன் வைத்தாள்..
என்ன நடக்குமோ என்று அங்கு கூடி இருந்த அனைவர் பார்வையும் கேள்வி குறியாக தான் இருந்தது....
இந்த கிழவியை எதிர்த்து யாரும் எதுவும் பேச முடியாது....ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட வாறு....விழிகள் பிதுக்கி நின்றனர்....
அந்த கூட்டத்தில் ஒரு பெரியவர்....என்னம்மா ஏதோ குழந்த ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியம் பண்ணிடுச்சு..... அதுக்கும் ஒரு துணை வேண்டும்மில்ல....சின்ன வயசு என்ன பண்ணும் பாவம்...
இப்ப உள்ள உலகத்துல இது எல்லாம் சகஜம்...இத மன்னித்து முறைப்படி இந்த அம்மன் கோவில் முன்னாலேயே சேர்த்து வச்சு வாழ விடுங்கம்மா....என்று தைரியமாக குரல் கொடுத்தார் அந்த பெரிய மனிதர்.... ராமநாதன்...
இதை கேட்ட அந்த கிழவிக்கு ஆவேசம் பொங்கி எழ....
யாரடா என்று.....உரத்த குரல் கொடுத்த அந்த கிழவிக்கு.....
நெஞ்சு வாலியால் துடித்து அந்த கிழவி அந்த அம்மன் கோவில் வாசலிலேயே விழுந்து செத்தாள்.....
ஆக வேண்டிய இறுதி சடங்கு முடித்து விட்டு... அந்த கிழவிக்கு.....
இதற்க்கு தீர்ப்பு இல்லாமல் யோசித்த அந்த கிராமத்தினர்......
அந்த கூட்டத்தில் தைரியமாக பேசிய அந்த பெரிய மனிதர்.... ராமநாதன்... அந்த ஊர் தலைவராக நியமித்து....
அவர் சொல்லும் திர்ப்புக்கும் தலை சாய்த்தனர்.....
அந்த பெரிய மனிதர்.... ராமநாதனின்... தீர்ப்பு...போன வருசம் சண்முகம் மகள் திவ்யா காதலிச்சான்னு...அவளுக்கு இந்த கிழவி கொடுத்த தண்டனையை நினைத்து நினைத்து இன்னும் ஏங்கி தவிச்சுகிட்டு இருக்காள்... இளம் விதவைன்னு பார்க்காம இந்த கிழவி ரொம்ப அசிங்க படுத்திடுச்சு... ஆகவே சண்முகம் மகள் காதலிச்ச அந்த பையன் சேகரையும்....இந்த ஜோடியையும் இந்த அம்மன் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிடாலாம்...ஆனா ஒன்னு இந்த சேகரும்,கோபியும். நான் போடும் விடுகதைக்கு பதில் சொன்னபிறகு தான் இந்த கல்யாணம் என்று அந்த பெருசு அவர்கள் முன் வைத்தது......
1).அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு?
2).எட்டாத ராணி இரவில் வருவாள் பகலில் மறைவாள்?
3).குழந்தைக்கு எந்த கை நம்பிக்கை?
4).உலகமே உறங்கினாலும் அவன் மட்டும் உறங்க மாட்டான்?
5).தொடாமலே அழுவான் தொட்டால் பேசுவான்?
6).வம்பு சண்டை செய்வான் வாசல் தாண்டி வரமாட்டான்?
7).காலை வருவாள் மாலை போவாள் அவள் யார்?
8).கை உண்டு பிடிக்க முடியாது கால் உண்டு நடக்க முடியாது?
இந்த விடுகதையை கேட்ட சேகரும், கோபியும் விடை தெரியாமல் விழிக்கின்றனர்..நமது எழுத்து வாசகர்கள் சேகருக்கும்,,,கோபிக்கும் உதவி செய்து இந்த இரண்டு இளம் விதைவைகளை வாழ வைக்கலாமே..