புரட்சி நெருப்பு------1

பூக்கள் வாசனையோடு சாதி வாசனையும் நிறைந்து காணப்படும் கிராமம். பறவைகளிலும் சாதி பிறிவினை உண்டு இக்கிராமத்தில்.

பெரியாரும், அண்ணாவும் யாரென்ற புலன்படாத கிராமம் இது.
சமத்துவமின்றி சாதிகள் சஞ்சரித்து கொண்டு வாழும் கிராமம் இது.
வேற்றுமையும் தீண்டாமையும் சரியாக கடைபிடிக்கும் கிராமம் இது.
பல நூற்றாண்டுகளாய் கடந்து வந்த சாதிக் கொடுமையை வேறறுக்க பல புரட்சியாளார்கள் பிறந்திருந்தாலும் இக்கிரமத்தின் ஒடுக்கப்பட்ட தலித்துக்களுக்காக பிறந்தவர் தான் தோழர் கார்க்கி.

சமுகத்தால் உயர்சாதி என்று சொல்லப்படும் சாதியில் பிறந்தவர் தோழர் கார்க்கி. இவரின் பள்ளி பருவத்திலிருந்த புரட்சியாளாராக வேண்டும் என்பது இவரின் கனவு. பற்பல புரட்சியாளார்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வீரல் நுனியில் வைத்து இருப்பவர்.இவரின் தந்தையே இவருக்கு ஓர் மிகப் பெரிய எடுத்துக்காட்டு. இவரின் தந்தை திலீபன், சாதி ஒழிப்பு போராளி. உயர் சாதியில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதால் ஆதிக்க சாதியினர் அவரை கொன்றுவிட்டனர். அன்று பிடித்தது கார்க்கிக்கு புரட்சித் தீ, இன்றும் அனைந்தபாடு இல்லை.

நம் சக மனிதனை தாழ்த்தவன் என்று சொல்வதை விட கேவலம் இந்த உலகில் வேற எதுவாது உண்டா..? அவர்களும் நம்மை போன்ற மனித பிறவிகள் தான் அவர்களை ஏன் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி உங்களுக்கு அடிமையாய் வாழ வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள். உங்களை போன்ற சாதி வெறி பிடித்த மனிதர்களிடம் வாழ்வதை விட எனக்கு வெட்க கேடான விடயம் ஒன்றுமின்றை என்று சொல்லி, எழுட்சி மிகு சிந்தனைகள் கொண்ட மாணவர்களை ஒன்று திரட்டி "சே புரட்சி இயக்கம்" என்றொரு இயக்கம் ஆரம்பித்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகாக குரல் கோடுத்தார் தோழர் கார்க்கி. மேலும் பல நற்பணிகளை செய்துவந்தார், ஒடுக்கப்பட்ட தலித்துக்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த கிராமத்திற்காகவும் பல பணிகளை செய்து வந்தார். அக்கம் பக்கத்து ஊர்களிலும் தன் இயக்கத்தை தொடங்கி பல போராட்டங்களையும், நற்பணிகளையும் செய்து வந்தார்.

தலித் மக்கள் யாரும் ஊர் கோவில்களுள் செல்லக்கூடாது என்றொரு வழக்கம் இருந்தது. அதை உடைத்தெறிய அவர்களுக்கும் சம உரிமை கேட்டு ஓர் மிகப் பெரிய "கோவில் நுழைவு போரட்டம்" ஒன்றை தன் இயக்க தோழர்களோடு சேர்ந்து தோழர் கார்க்கி வழி நடந்த தயாரானார். பிற ஊர்களில் இருக்கும் தன் இயக்க தோழர்களை ஒன்று சேர்த்தார்.

கோவில் நுழைவு போராட்டத்தை தான் பிறந்த கிராமத்தில் இருந்து தொடங்கினார்.
ஒரு அலமரத்தின் நிழலில் இயக்க தோழர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் திரண்டனர். தோழர் கார்க்கி ஒரு நாற்காலி மேல் நின்று கூடிருந்த மக்களுக்கு தன் முகம் தெரியும்படி அனைவரின் பார்வையையும் தன் மீது இழுத்தார். பிறகு தன் உரையை மிக உக்கிரமாக ஆரம்பித்தார் "இது நம்முடைய உரிமைப் போராட்டம்.

நமக்கு போராட யாரும் வானத்தில் இருந்து குதிக்கப் போவதில்லை, நமது உரிமைகாக நாம் தான் முன்நிற்க வேண்டும். அவர்கள் மட்டுமே கோவிலுக்கு உள்ளே செல்ல வேண்டுமா..?

நாம் சென்றால் கடவுள் என்ன இறந்தா போய் விடுவார்...?
வாருங்கள் பார்க்கலாம் கடவுள் என்ன செய்கிறார் என்று...?

எத்துனை காலம் தான் கொட்ட கொட்ட குனிந்து கொண்டே இருப்பது...?

நாமும் நிமிர்ந்து பார்க்க வேண்டாமா...?

சமத்துவ மனிதனாய் வாழ வேண்டாமா...?

நம் பொருமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை காட்டுவோம்,
நமக்கும் உரிமை உண்டு என்பதே எடுத்துரைப்போம்...!!

என்று தோழர் கார்க்கி வீரவுரை மொழிந்தார்.நாளை காலை சிவன் கோவிலின் முன்பு அனைவரும் ஒன்று திரழுவோம் என்று கூறி விடைபெற்றார் தோழர் கார்க்கி. மக்கள் அனைவரும் பரபரப்புடன் களைந்து சென்றனர்.

------தொடரும்------

எழுதியவர் : கோபிநாத் (24-Nov-14, 1:44 am)
Tanglish : puratchi neruppu
பார்வை : 470

மேலே