என்னவாக வேண்டும் நான் உனக்கு தோழியா அல்லது
உன்னை பார்க்க வேண்டும் என்று
துடிக்கிறது என் மனம்.
அதை ஏனோ சொல்ல தடுக்கிறது
என் உதடுகள்.
என் கண்கள் உன்னை தேடுகின்றது
தினம் தினம்.
அதை ஏனோ பார்க்க தடுக்கின்றது
என் கண் இமைகள்.
என் கால்கள் உன்னை பார்க்க
செல்கிறேன் என்கிறது தினம் தினம் .
அதை ஏனோ செல்ல தடுக்கிறது என் மனம்.
நீ என்னுடன் இருக்கும் போது
என் இதயம் துடிக்கிறது நீ எனக்காக என்று .
நீ என் அருகில் இல்லை என்றால்
என் மனம் சொல்கிறது
நீ இல்லையேல் நான் எல்லை என்று.
உன் அன்பினால் என்னை
பைத்தியமாக்கினாய்.
நான் கண்ட கனவுகளை எல்லாம்
நினைவக்கினாய்.
உன்னை விட்டு பிரிய மனமில்லை எனக்கு.
எனக்கு பிடிக்காத விசயங்களும்
பிடிக்க தொடங்கியது உன் அன்பால்.
உன் அன்பு என்றும் எனக்கு கிடைக்க
என்னவாக வேண்டும் நான் உனக்கு தோழியா அல்லது ?
-புவனா சக்தி

