-------------கற்பற்றவர்களே---------------

-------------கற்பற்றவர்களே---------------
கடற்கரை மண்ணில்
கடலலை முகம் சுழிக்க
காதல் செய்யும் கற்பற்றவர்களே..!
பூங்காவின் புதருக்குள்
பூக்கள் தற்கொலை செய்ய
காதல் செய்யும் கருணையற்றவர்களே..!
திரையரங்கின் ஓர இருக்கையில்
இருட்டுக்கு கண் கூச
காதல் செய்யும் கண்களற்றவர்களே..!
ஒளிவிளக்குகளுக்கு இடையில் மதுவுடன்
இரவுக்கு போதையேற
காதல் செய்யும் கல்வியாளர்களே..!
உணருங்கள் இங்கு இவர்கள்
உயிர்பிரியும் நேரத்தில்
உணர்த்தும் உண்மையான
உன்னதக் காதலை..!
இல்லையேல் உயிர் விடுங்கள்
காதலை காம சிறையில்
கடுங்காவலில் வைக்காமல்..!