உன் நேசமும் என் சுவாசமும்
எனக்கென்று இறைவன்
உன்னை பரிசாகக் கொடுத்தான்..
இந்த உறவை - நான்
நேசிக்கவில்லை
சுவாசிக்கின்றேன்..!!
காதலா!
நான் சுவாசிப்பதே
நீ என்னை நேசிக்கத்தான்..!
உன் நேசமே
இல்லையெனும் போது
நான் சுவாசிப்பதெதற்கு..??
இந்த சுவாசம் தான் எதற்கு..??!!