கிராமத்துக் காதல்

கிராமத்தில் காதலர்கள் நிறைய
இருந்தும் பண்பாடு கலாச்சாரம் உள்ளதால்
வெளியில் தெரிந்தால் அவமானம் ஏற்பட்டு விடும்
என்ற பயம் அவர்களை இலைமறை காய் போல்
காதலை மறைத்து வாழ செய்கிறது
ஆனால் ஆணித்தரமான இறுக்கமான
காதல் கிராமத்துக் காதல்தான்
பட்டணத்துக் காதல் பாதியிலே முறியும் என்று பாடிய கவிஞன்
உண்மையை எடுத்து சொல்லிய விதம் அருமை அருமை
வெட்ட வெளியில் கட்டி அணைக்கும் காதலுக்கும்
மற்றவர் கண்களுக்கு தென்படாத தெளிவான காதலுக்கும்
நிறைய வேறுபாடுகள்
வலிமை மிக்க காதல் கிராமத்துக் காதல்
கிராமத்திலே திருமணங்கள் முறிவது மிகக் குறைவு
நெட்டையோ கட்டையோ நாம் நமக்கு
என்ற குறுகிய வட்டத்திற்குள்
அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது
அதைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும்
கிராமம் என்றால் காதலுக்கு தனி சுவைதான்
உண்மையுள்ள வெள்ளை மனங்கள் இணையும் காதல்
கிராமத்தில் தான் காணமுடியும்
கிராமத்துக் காதல் வஞ்சம் இல்லாத நெஞ்சம் நிறைந்த காதல்
அவர்களின் காதல் பற்றி எழுதும்போதே இனிமை பொங்குகிறது
வைரம் பாய்ந்த காதலால் வளம் கொழிக்கும் குடும்பங்கள்
கிராமம் காதலுக்கும் காதலர்களுக்கும் சொர்க்கமே