மேல்படிப்பு படிக்க போறேன்
நேத்து எங்க வீட்ல நடந்த விஷயம் இது.
பெரியப்பா : சந்தியா
நான் : சொல்லுங்க அப்பா
பெரியப்பா : இது எத்தனாவது வர்சம் படிக்கற டா??
நான் :3வது வருஷம்
பெரியப்பா :இன்னும் எத்தன வருஷம் படிக்கணும்
நான் :ஒரு வருஷம் இருக்கு
(அரை மணி நேர அறிவுரைக்கு பின் )
பெரியப்பா:படிச்சு முடிச்சுட்டு என பண்ண போற???
நான்: (போச்சுடா மாட்டிகிட்டேனா)... அது வந்து பெரியப்பா இது முடிஞ்சதும் arrearnu ஒரு மேல்படிப்பு இருக்கு அத தான் பண்ண போறேன்..........
பெரியப்பா: பெயில் ஆகாம படிசுரும்மா.....
(ஹய்யோ ஹய்யோ..... பெரியப்பாக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சிருந்த நா அவ்ளோ தான். சாரி பெரியப்பா கண்டிப்பா பெயில் ஆகாம படிசுறேன்....)