கவிச் சீலை

மாலை நல்தருணம் - மலர்
சோலை நீ அணிய
சேலை ஒன்று நெய்தேன்
பட்டு நூல்களால் அல்ல... பண்
பாட்டு நூல்களால் !!
...உன்மேனி தழுவத்தான்
புன்சிரிப்புடன் மடிகின்றன..
பொன்மேனி எழுத்துக்கள்
பட்டுப் பூச்சிகளாய் !!
எத்தனை எண்ணங்கள்.. அதில்
எத்தனை வண்ணங்கள்..
அத்தனையும் சொல்லும்
இப்பித்தனின் ஏக்கங்களை !!
மின்னும் தாரகைக்கு
மேலும் காரிகை
சேர்க்க..தூரிகை
ஆகிறது என்கவிதை சாரி-கள் !!
எந்த மாந்தருக்கும் - இனி
அந்தி வந்ததை... மந்தாரை
சொல்லும்.. இல்லைஉன் முந்தானை
சொல்லும் !!