என் நெல்லை பயணம் - 1 - ரம்யா சரஸ்வதி

இது முழுக்க முழுக்க என்னோட பயணம் …. என் பயணத்துல நடந்த நிகழ்வு பற்றிய கட்டுரைங்க….திருச்சி-ல இருந்து திருநெல்வேலி போறதுக்குள்ள நான் சந்திக்குற மனுசங்க எப்படிலாம் இருக்காங்க இந்த பயணத்துல என் மனசு என்ன-லா அசைப்போட்டு எனக்கு புதுசு புதுசா என்ன கத்து தருது-னு பற்றிய கட்டுரை….

காலை-ல சேவல் சரியா கூவுதோ இல்லையோ இந்த அலாரம் இம்ச கரெக்டா கூவிடும்…. 4 மணிக்கே சரியா கூவிடுச்சு… அம்மா-வும் உடனே சுப்ரபாதம் பாட ஆரம்பிச்சுட்டாங்க ரம்யா எழுந்திரு….. மணி 4.05 மணி 4.10 இப்படியே சொல்லி சொல்லி எழுப்பிடுவாங்க….அப்பதான் நா ஒரு 4.30 மணிக்காவது எழுந்திருப்பேனு….ஒரு வழியா 4.30 மணிக்கு முழிச்சிட்டேன்…உடனே எழுந்திருச்சுடுவேனு தப்பு கணக்கு போடாதீங்க….முதல்ல செல்லு எடுத்து எல்லாரும் அனுப்புன மெசேஜ் க்கு ரிப்ளை பண்ணிடுவேன்….காரணம் நண்பர்கள் எனக்கு ரொம்ப முக்கியம்…இன்னொரு காரணம் தூக்கம் நல்லா கலஞ்சிடும் போன் பாத்துட்டு இருந்தா…. அப்பறம் எழுந்து கிளம்ப ஆரம்பிச்சோம்…7.15 க்கு இரயில் திருச்சி விட்டு கிளம்பிடும்…. நா 5.45க்கு தான் டிரஸ் அயன் பண்ணி முடிச்சேன்…ஆட்டோ 6.15 க்கு வீட்டுக்கு வந்துடும்… எப்பவும் கடைசி நேரத்துல வேகமா எல்லா வேலையும் பண்ணுறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்…அது ஒரு திரில்….எங்க அப்பா திட்ட சங்கீதமா வாங்கிட்டே ஷார்ப்பா ஆட்டோ வரதுக்குள்ள கிளம்பிட்டேன்… நா எப்பவும் இப்படிதான் …. ஆனா கரெக்டா டைம்க்கு கிளம்பிடுவேன்…அப்பறம் வீட்ல இருந்து கிளம்பியாச்சு…வழி-ல வர எல்லா சாமிக்கும் ஒரு வணக்கம் போடுறது என் பழக்கம்…எப்ப எங்க போனாலும் ஒரு அவுங்கள கும்பிடாம போகமாட்டேன்….ஒரு வழியா இரயில்வே நிலையம் போய் சேர்ந்து இரயில்-ல ஏறிட்டோம்… நானும் அம்மாவும் மட்டும் தான் போறோம்…..எனக்கு எப்பவும் சன்னல் ஒரம் தான்…. இல்லனா எனக்கு உயிரே போய்டும்… வேடிக்க பாக்க முடியாதுல….( அப்படி என்ன வேடிக்க பாக்கமுடியும் காடு மலை-லனு நீங்க யோசிக்குறது எனக்கு தெரியுது…அத சொல்ல தான் இந்தக்கட்டுரைய போட்டேன்…..) பன்னீர் தூவுறமாறி ஒரே மழை வேற…. என் சன்னல் மட்டும் தான் திறந்து இருந்துச்சு…எல்லாரும் சாத்திகிட்டாங்க…எனக்கு மழை-னா உயிர்…. மழைத்துளியோட கொஞ்சம் ஆட்டம்….

அதுக்குள்ள எங்க சீட் பக்கத்துல என் தாத்தா பாட்டி வயசுல இரண்டு பேரு வந்தாங்க… ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் மாதிரி தெரிஞ்சுது…அப்ப ” டீ காபி டீ காபி “ –னு ஒரு டீக்காரன் எங்க சன்னல் கிட்ட கத்திட்டே நின்னான்…. நாங்க யாரும் வாங்க தயாரா இல்லனா பேசாம போனும்…அதவிட்டுட்டு அந்த தாத்தா பாட்டிய பாத்துட்டு இது ரிசர்வேசன்….அன்ரிசர்வ் கோச் அங்க இருக்குனு சொன்னான்….எனக்கு செம்ம கோவம் சுர்னு ஏறிடுச்சு…. அதென்ன கஷ்டப்படுறவங்க என்ன ரிசர்வேசன் –ல வரமாட்டாங்களா என்ன….. எப்படி அவன் சொல்லலாம்…. டக்குனு பாட்டி ” எனக்கு எல்லாம் தெரியும் தம்பி “-னு அவன் வாய அடச்சுட்டாங்க சர்வசாதாரணமா சங்கடப்படாம….இதுமாரி நிறைய அனுபவத்துல மனம் பழகி இருக்கும் போல பாட்டிக்கு…தாத்தாக்கு தான் ஒருமாறி ஆகிடுச்சு முகம்…..…எனக்கு செம்ம கோவம் அந்த டீக்காரன்ன திட்டி இருப்பேன்…..நா எதார்த்தமா திட்ட , அது பாட்டி தாத்தாக்கு தாழ்வுமனப்பான்மை வரக்கூடாதேனு அமைதியா இருந்துட்டேன்….அதும் இல்லாம அம்மா வேற இருந்தாங்க….ஆனா அவன் போய்ட்டு போய்ட்டு வரப்ப முறச்சுட்டே இருந்தேன்….செம்ம கடுப்பு….காலை-லயே இரயில் கிளம்புறதுக்கு முன்னாடி இவ்வளவு அக்கப்போர்….. நா தெரியாம தான் கேக்குறேன் அந்த டீக்காரன் மட்டும் என்ன பெரிய லட்சாதிபதியா என்ன??? அப்படியே ஒரு லட்சாதிபதியா இருந்தாக்கூட அப்படி சொல்ல யாருக்கும் உரிமை இல்ல….எனக்கு தெரிஞ்சு பணக்காரங்கள விட நம்மளமாறி ஆட்கள் தாங்க ஏழைங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறோம் வீணாப்போன பகட்டுக்கும் பணத்துக்கும் நாகரிகத்துக்கும்…… இப்படியே என் மனசு புலம்பிட்டே இருந்துச்சு…. அப்பறம் ரெண்டு பாய் அண்ணாங்க வந்து எதிர்புறம் உட்கார்ந்துட்டாங்க…

அப்பறம் ஒரு சாமியார் தாத்தா ஒரு அங்கிள் கூட வந்தார்…. மனுஷன் ஆன்மீகத்த வலுக்கட்டாயமா அந்த அங்கிளுக்கு இரயில் கிளம்புற வர திணிச்சுட்டே இருந்தாரு…. எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு…பாவம் அந்த அங்கிள்….ஒன்னும் சொல்லமுடியாம நின்னுட்டு இருந்தார்…. ஒளி எப்படி வந்துச்சு… காற்று எப்படி வந்துச்சு…-னு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தாரு….. எல்லாரும் அந்த சாமி தாத்தா –வயே குறுகுறு-னு பாத்துட்டு இருந்தாங்க…இந்த காமெடி-ல டீக்காரன் கோவம் எப்படி போச்சுன்னே தெரியல….. அந்த அங்கிள் எப்படா இரயில் கிளம்பும் –னு நினைக்குறமாதிரி அவர் முகபாவனை தெரிஞ்சுது…….
அப்பறம் அந்த தாத்தாக்கு பார்சல் சாப்பாடு வாங்கி கொடுத்தாரு….தாத்தா அத அவர் சீட்-ல வச்சிட்டு பக்கத்துல இருக்க அண்ணாகிட்ட ” பாத்து மேல உட்கார்ந்துடாதீங்க….எனக்கு ஒன்னும் இல்ல உங்களுக்கு தான் கஷ்டம் “-னு ஒருமாரி சுருக்குனு சொன்னாரு………. எனக்கு அவர் அப்படி சொன்னது பிடிக்கல…. இதே ” சாப்பாடு இங்க வச்சு இருக்கேன்…கொஞ்சம் பாத்துக்கோ தம்பி “-னு சொல்லுறது எப்படி இருக்கு….அது தான பெரியவங்களுக்கான பக்குவமான அடையாளம்……… அப்பறம் ஒரு வழியா 5 நிமிஷம் லேட் ஆக்கி 7.20 க்கு இரயில் கிளம்பிட்டு……( மறக்காம அந்த அங்கிள்ள சன்னல் வழியா எட்டிப்பார்த்தேன்…. பாவம் மனுஷன் பெருமூச்சு விட்டாரு தாத்தா படுத்துனபாடு-ல…. )மழையும் நின்னுட்டு…..ஆனா தாத்தா அவரோட பேச்ச அவருக்கு பக்கதுல இருந்த அண்ணாக்கும் அவுங்க மனைவிக்கும் டைவர்ட் பண்ணிட்டாரு இப்ப…..அவுங்களுக்கு பதில் சொல்லிமுடியல….அடுத்தடுத்து தாத்தா கேட்டுட்டே இருந்தாரு…. ஆன்மீகத்த திணிக்கபாத்தாரு…..அவர் வயசுக்கு அது சரி-னு படலாம்…ஆனா வலுகட்டாயமா எதுக்கு அடுத்தவங்க மேல திணிக்கனும்….அது தப்பு தான……இயல்பா வரவேண்டிய ஒன்ன வலுக்காட்டாயப்படுத்துறாரு தாத்தா…..கொஞ்ச நேரத்துல அந்த அக்காவும் அண்ணாவும் வேற இடம் போய்ட்டாங்க…. அடுத்து எங்க சைடு பாத்தாரு…. நா டக்குனு சுஜாதா ஐயாவோட மர்மநாவல்-ல மூழ்கிட்டேன்…அம்மா தூங்கிட்டாங்க….

உண்மை-லயே சுஜாதா ஐயா ரொம்ப சென்ஸ் ஆப் ஹியூமர் உள்ள மனிதர்….. 3 கதை படிச்சேன்…. நேரம் போனதே தெரியல…. அதுக்கு மேல படிக்க ஓடல… இரயில் வேற அய்யலூர்-ல நின்னுச்சு….அப்பதான் மேல நிமிர்ந்தேன்…..

” மணப்பாறை முறுக்கு அதிரசம் “ –னு கூவி கூவி வித்துட்டே போனாங்க…… இந்தமாதிரி சத்தம் இரயில் பயணம்-ல தான் அதிகமா கிடைக்கும்…. என்னப்பொருத்தவர அது ஒரு பாடல் அழகான சங்கதியோட இழுத்து இழுத்து கூவிட்டே போவாங்க….எத்தன பேர் இத இரசிச்சு கேட்டு இருக்கீங்கனு எனக்கு தெரியல……. அவுங்க உயிர்போக கத்துனாலும் அவ்வளவா விற்பனை இருக்காது…..ஏன் தெரியுமா இதுலாம் சுத்தமா கெமிக்கல இல்லாம செஞ்சு கொண்டு வர சாப்பாட்டுப் பொருள்….ஆனா நம்ம ஆளுங்க எந்த எண்ணை-ல சுட்டதோன்னு வாங்கமாட்டாங்க….ஆனா கைல ஒரு சிப்ஸ் பாக்கெட் வச்சுட்டு சிப்ஸ் ஓட கெமிக்கலையும் முழுங்கிட்டு இருப்பாங்க….உண்மை தான அது கெட்டுபோகாம இருக்க எவ்வளவு கெமிக்கல் போடுவான்…ஆனா அவனதான் தலை-ல தூக்கிவச்சு ஹைஜினிக் புட்-னு கொண்டாடும் உலகம்…இந்த மாதிரி ஏழைங்களுக்கு எங்க வாழ்வு கொடுக்கப்போறாங்க?????? கேட்டா நாகரிகம் உணவு–னு சொல்லுவாங்க….இன்னும் கொஞ்ச காலத்துல இந்த விற்பனையாளர்கள் இருப்பாங்களா-னு கேள்விக்குறி தான்…..ஒரு வேள என் பேத்தி பேரன் காலத்துல இந்தமாதிரி இரயில் வியாபாரம் இருந்துச்சு –னு புக்குல வேணா படிப்பாங்க….காலம் மாற மாற ஒவ்வொன்னும் அழிஞ்சுட்டே வருது….. இப்படியே என் மனசு சமூகத்த அசப்போட்டுட்டு இருந்துச்சு இரயில் கிளம்புனதுகூட தெரியாத அளவு..….

அப்பறம் இரயில் போகிற வழி எல்லாம் ஒரே நெல்லு அழகா ஆள் உயரத்துக்கு வளர்ந்து நின்னுட்டு இருந்துச்சு…..அத பாத்ததும் அடுத்த அழிவப்பத்தி மனசு
அசைப்போட்டுச்சு…..இப்பலாம் விவசாயம் குறைஞ்சு போச்சு…..எனக்கு தெரிஞ்சு அவ்வளவா யாரும் விவசாயப்படிப்பு படிக்க ஆசப்படுறது இல்ல…. டாக்டர் , இன்ஜினீயர் , கலெக்டர் ஆகதான் ஆசப்படுறாங்க……அவுங்கள குத்தம் சொல்லி தப்பு இல்ல…. முதல்ல விவசாயிக்கும் விவசாயம் தொழில்-க்கும் நம்ம நாட்டுல ஒரு முக்கியத்துவம் கிடச்சாதான அதுல எல்லாருக்கும் நாட்டம் வரும்…. எத்தன பெற்றோர்கள் பிள்ளைங்களுக்கு விவசாயி பத்தியும் விவசாயம் பண்ணுறதோட முக்கியத்தையும் சொல்லி இருக்காங்க.. ????
ஏன் இப்பலாம் விவசாயிக்கூட தன் மகன் டிப்டாப்பா டிரஸ் போட்டு தஸ்புஸ்-னு இங்கிலீஷ்-ல பேசுனா தான் மதிப்புனு நினைக்க ஆரம்பிச்சுட்டான்….கத்துக்க வேண்டியதுதான் , தப்பு சொல்லல….அதுக்காக விவசாயத்த விடுறதும் மறக்குறதும் தான் தப்புனு சொல்லவரேன்…..நாம அவுங்கள தப்பு சொல்லமுடியாது… எல்லாம் காலத்தோட வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் காரணம் , ஒருபக்கம் அறிவ வளர்த்தாலும் நம்மள அழிவுப்பாதை-ல போய் சேர்க்குது …… இன்னும் கொஞ்சநாள் போனா சாப்பாடே வேணாம் ஒரு மாத்திரை போதும்… தேவையான சத்தும் சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்-னு விற்க ஆரம்பிச்சுடுவாங்க……அதையும் நம்ம மக்கள் சாப்ட நேரம் இல்ல நல்ல கண்டுபிடிப்பு-னு நோபல் பரிசுக்கூட கொடுப்பாய்ங்க……என்னைக்கு வெள்ளக்காரன் உள்ள வந்தானோ அன்னைக்கே எல்லாம் போச்சு…..இப்படியே போனா சோத்துக்கு சிங்கி அடிக்கவேண்டியது தான்…. என்னதான் சொல்லுங்க தலைவாழைப்போட்டு சுடசுட அந்த இலைவாசத்தோட சாப்புடுற சாப்பாட்டுக்கு ஈடாகுமா என்ன ???எனக்கும் என் வீட்ல விவசாயத்தோட பெருமை சொல்லித்தரல…சொல்லி இருந்தா கண்டிப்பா நானும் ஒரு விவசாயப்பெண்ணா இருந்து இருப்பேன் இப்ப…….இப்படி என் மனசு குமுறிக்கிட்டு இருக்கப்ப கிராசிங்க் போட்டாங்க இரயில் நின்னுட்டு……

அப்ப ஒரு அங்கிள் கதவுக்கிட்ட வெளிய எட்டிப்பாத்தாரு….இது நம்ம மக்களுக்கே உள்ள குணம்….இரயில் ஏறும் போது காதுல மாட்டுன ஹியரிங்செட்ட கழட்டாம அலஞ்சுட்டே இருந்தாரு…கண்டிப்பா அவரு வெளிநாட்டுக்காரன் கலாச்சாரத்துல மோகம் கொண்ட நம்ம கலாச்சாரத்த மதிக்காத ஒருவர்-னு தோனுச்சு…அவரோட உடையும் அத உறுதிபடுத்துச்சு….அவர் பின்னாடியே ஒரு குட்டிப்பையன்(அவர் பையன்) அவனும் அப்படியே அவுங்க அப்பா மாதிரி காதுல மாட்டிட்டே திரிஞ்சான்….. ஆமா எனக்கு ஒரு சந்தேகம் காது வலிக்காதா இவுங்களுக்கு…இப்படியே போச்சுனா சீக்கிரமே காது செவிடாகிடும்…. ஒரு மணி நேரம் மேல ஹியரிங்செட் –ல பாட்டு கேட்டா லட்சம் பாக்டீரியா பரவுமாம்…..பாட்டு கேக்கவேண்டியது தான் தப்பே இல்ல…..எல்லாம் ஒரு அளவோட இருந்தா சரியா இருக்கும்…..இந்தமாறி ஆளுங்களுக்கு தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு-னு நம்ம முன்னோர்கள் சொன்னாங்களோ???? அப்பறம் இரயில் கிளம்பிட்டு.......


பயணம் இன்னும் முடியவில்லை................................ தொடரும்....................

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (26-Nov-14, 10:27 am)
Tanglish : en nelai payanam
பார்வை : 432

மேலே