வேலை இல்லா பட்டதாரி -- அரவிந்த் C
நகராத நிமிடங்கள்
கழியாத பொழுதுகள்..
நான் விற்று தொலைத்த
வெட்கங்கள் ரோசங்கள்..
படித்து முடிந்து,
ஆகிறது மாதம் பல..
என் கல்லூரி புத்தகங்களும்
எடைக்கு எடை காசு தந்து
வெளியேறி போக,
இன்னும் வீட்டினிலே நான்..
மௌன மொழி பேச
கற்றுக்கொண்டு,
என் அறையினில்
சிறைவாசம் சென்றேன்..
வீதிக்கு ஒரு கல்லூரி
அதில் படித்து முடித்ததும்
வீதியில் மாணவர்கள்..
வேலை வாய்ப்புகள்
இல்லா நாட்டில்,
வசதி வாய்ப்பிற்காக
பொறியியல் கல்லூரி சேர்க்கும் அவலம்,
நிஜத்தினை உணர மறுக்கும் உலகம்,.
உருகி நிற்கும் இளைஞன்,
என் பெயரும் தப்பவில்லை அப்பட்டியலில்..
வேண்டும் ஒரு வேலை
என் தேவையை
பூர்த்தி செய்ய அல்ல
என் ஆசையை நிறைவேற்றி கொள்ள..
தாய்க்கு ஒரு சேலை
தந்தைக்கு ஒரு சட்டை
தங்கைக்கு ஒரு தாவணி
தோழிக்கும் தோழனுக்கும் சில பொருட்கள்
இதுவே என் ஆசை..
எப்போது நிறைவேறுமோ இது..?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
