ஆச்சி ON தி வே
எல்லோருக்கும் தெரிந்த புளியமரத்தில் கார்த்திகை மாத காற்றில் கட கடவென புளிகள் விழுகின்றன .என் வீட்டின் எதிரே ,நானும் என் மகளும் தெருவில் நடக்கின்றோம் ,தினமும் என் ஆச்சி அதிகாலை 6 மணிக்கு முன்னே கூன் விழுந்த முதுகை வளைத்து புளி ஓன்று விடாமல் பொறுக்கி முதுகு வளையாத சிலருக்கு குற்றி கொடுப்பாள் ..ஆச்சி சில நாட்களாக ஊரில் இல்லை.
கிழே விழுந்த புளி ஒன்றை எடுத்து ,அப்பா ஆச்சி என்று கூவி கொண்டே .ஆச்சி வீட்டை நோக்கி ஓடுகிறாள் .பூட்டிய வீட்டை பார்த்து ஏமாற்றத்துடன் .அப்பா ஆச்சி கா..... கா ..என்ன மக்களே ஆச்சி ON தி வே