நான் என்ன சொல்வேணடி கண்ணம்மா

ஏன்டி கண்ணம்மா
உன் கண்ணால
மயக்குகின்றாய்
கண்ணாலே
கண்ணாலே
என்னை சிறை பிடித்தாய்
உன்னாலே உன்னாலே
நான் கைதியாய்ஆனேனடி....

ஏன்டி கண்ணம்மா
கணக்குத்தான் நீ போட்டு
கச்சிதமாய் காய் நகர்த்தி
என்னை வளைத்துப் போட்டு
என் மூச்சை நீ முந்தாணையில்
முடிந்துவிட்டாயே........

ஏன்டி கண்ணம்மா
எக்கச் செக்கமான
கற்பனையோடி உன்
பெருமூச்சிக்காற்றின் சூடு
என் இதயம் வரை வருகுதடி
சூடு ஏறியே என் இள நரம்பு
பிண்ணுதடி........

ஏன்டி கண்ணம்மா
சீவி சிங்காரித்து சிவந்த
நெற்றி மேலே பொட்டு வைத்து
சேர்த்து வைத்த சில்லறைக்கு
சிமிக்கி வாங்கி மாட்டி சிவனே
என்று இருந்த என்னை
மயக்கியதும் ஞாயமோ......

ஏன்டி கண்ணம்மா
என் எண்ணம் தடு மாறுதடி
என் மனம் என்னும் மைதானத்தில்
உன் நினைவு உருண்டு புரண்டு
ஓடி விளையாடுதடி உள்ளதை உளற
முடியலடி இல்லறத்திலும்
இணைய வழி இல்லையடி........

ஏன்டி கண்ணம்மா
பத்துக்காசி சம்பாதிக்க
வேண்டும் நான் பட்டணம்
போகப் போறேனடி
போன கடன் கட்டி மீதியை
சேர்த்துதான் நான் நாடு
திரும்ப வேண்டுமடி வரும்
போது சிங்காரி நீ காத்திருந்தால்
உன் கரம் சேரும் கணவன் நானடி
இப்போது நான் சென்று வருகின்றேன்
பிரியா விடை கூறடி.........

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (27-Nov-14, 8:20 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 137

சிறந்த கவிதைகள்

மேலே