தனித்தவம் ஏனோ

பார்வைகள் வார்த்தைகள்
கொண்டு வந்தால் என்ன?
பதுக்கிய பாசங்கள்
மீட்டுத் தந்தால் என்ன?
பாதையின் வளைவில்
பிரிவினை வெறுத்து
நீ தயங்கி நின்றிடவே!
உடன்வர ஒருக்கணம்
உன் முகம் திரும்ப
எதிர்ப்பார்ப்புகள் கொன்றிடுதே!
கல் குகைக்குள்ளே
தனித்தவம் ஏனோ?
என்னை நுழைத்துக் கொண்டால் என்ன?
முள்வேலிப் போட்டு
முறைப்பது ஏனோ?
மலர் மணக்க விட்டால் என்ன?
பார்த்துக் கொள்ளாமல்
பார்த்தும் பழகி நில்லாமல்
தூரங்கள் கூசிடவே!
இனி கேட்க வேண்டும்
எங்கிருந்தாலும் நம்
நெருக்கங்கள் பேசிடவே!
ஒருவரின் தவிப்பு
ஒருவரின் தவிர்ப்பு
இணைந்து தகர்த்தால் என்ன?
ஒருமுறையேனும்
நிஜங்களை நகர்த்தி
காதல் செய்தால் என்ன?
நிழலென நீ வர
வெயிலிலும் நெகிழ்ந்து
காதலைக் காத்திருப்பேன்!
உன் பதில் புரிந்திட
எப்படி எங்கு
எதனை தூதுரைப்பேன்?????.......