அன்பு -karuna

நான் உன்னை நேசிக்கிறேன்..
என் வாழ்க்கையில் நீ
வந்த பிறகே ஒளி தோன்றியது
உன்னை எல்லாப் பிறவிகளிலும்
கணவனாய்ப் பெறவே
விரும்புகிறேன்..
வேண்டுகிறேன்..
என் உயிர் நீயே..
உன்னை கணவனை தந்ததற்கு
எப்படித்தான் நன்றி சொல்வேனோ
இறைவனுக்கு..பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்பான கணவனே..

...
என்று முகப் புத்தகத்தில்
பதிந்து விட்டு
புரண்டு படுத்தாள்
மனைவி..
பக்கத்தில் படுத்திருந்த
கணவனை..
டீ போட்டுவிட்டு வந்து
ஏழு மணிக்கு
தன்னை எழுப்பச்
சொல்லி விட்டு!
..
உடனே ..
ஒரு லைக் போட்டு
விட்டு
டீ போடச் சென்றான்..
அன்புக் கணவன்!

எழுதியவர் : கருணா (28-Nov-14, 2:52 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 134

மேலே