ஈரம் -கருணா

மண்ணில் ஈரம்
பயிரை வளர்க்கும்
விண்ணில் ஈரம்
மழையை கொடுக்கும்
கண்ணில் ஈரம்
கல்நெஞ்சை உருக்கும்
உன்னில் ஈரம்
உறவை வளர்க்கும்
என்னில் ஈரம்
சிந்தை தெளிவிக்கும்
நெஞ்சில் ஈரம்
மனிதம் வளர்க்கும்
என்பதனால்..மனதில்
எங்கேனும் ஒரு மூலையில்
ஈரம் கொண்டே வாழ்ந்திட
இனித்திடும் வாழ்வு
ஒவ்வொரு பொழுதுமே!

எழுதியவர் : கருணா (28-Nov-14, 2:32 pm)
பார்வை : 220

மேலே