என் நெல்லை பயணம்-2- ரம்யா சரஸ்வதி

மீண்டும் பயணம் கிராசிங்கில் இருந்து தொடர்கிறது......

கிராசிங் ஓவர்-

ரயில் புறப்படும்போது என்னைப்பார்த்து ஒரு கிராசிங் வந்துச்சு...….

அது ரயில் இல்ல…ஒரு பயபுள்ள….. என்னையே குறு குறுன்னு பார்த்தான்….….நான் அப்பதான் கவனிச்சேன்….இருந்தாலும் ஒரு சந்தேகம் நம்மளதான் பாக்கறானா-னு திருப்பி பார்த்தேன்… ( பெண்களுக்கேஉண்டான இயல்பான குணம் தானே…?.இதைதான் சில ஆண்கள் தவறாக புரிந்துகொண்டு கற்பனையில் பறக்கின்றனர் )

இப்ப ஊர்ஜிதம் ஆகிடுச்சு…..

“சரி ரம்யா ரயிலவிட்டு இறங்கறவரை இந்த பக்கமே பார்க்ககூடாதுனு” சன்னல் பக்கம் திரும்பிட்டேன்…கழுத்துவலிதான் மிச்சம்….

அப்பதான் சன்னல் வழியா அந்தக்காட்சிய பார்த்தேன்….

வடமதுரைக்கிட்ட ஒரு ஓட்டு வீட்ல ஒருமாட்டுத்தொழுவம்….

அதைப்பார்த்ததும் என் கிராமத்து வாழ்க்கை ஞாபகம் வந்துச்சு…..சில குடும்பச்சூழல் காரணமா நான் அஞ்சாங்கிளாஸ்( பெயரிலே அஞ்சா-னு இருக்குறதால தான் என்னவோ அது என் அஞ்சாத பள்ளி பருவம் ) எங்க தாத்தா கிராமத்துலதான் படிச்சேன்….உண்மையா சொல்லறேன் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி……. இல்லைனா கிராமத்து வாழ்க்கைய அனுபவிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குமா..????? சிட்டி-ல வாழ்ந்து பழகின எனக்கு அது ஒரு புது அனுபவம் , ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் கொஞ்சநாள்ல அப்படியே கிராமத்தோட ஐக்கியமாகிட்டேன்…..சரி அதைப்பத்தி சொன்னா கதை பெரிசா போய்ட்டே இருக்கும்…மாட்டுத்தொழுவத்துக்கு வருவோம்…

.எங்க தாத்தா வீட்லையும் மாட்டுத்தொழுவம் இருந்துச்சு…. அப்படியே என்னையும் அறியாம என் பழைய முத்தான நினைவுகள்ல….மனசு லயிச்சு மூழ்கிட்டேன்….. எப்ப பார்த்தாலும் அங்கேயேதான் கிடப்பேன்…. எங்க பெரியம்மா வீட்டு கொல்லப்புறத்துல உட்கார்ந்துட்டு, அவுங்ககிட்ட கதை அடிச்சுட்டே அந்த லட்சுமி , மீரா-லாம் என்ன பண்ணுதுனு நோட்டம் விட்டுட்டே இருப்பேன்….யாரு இந்த லட்சுமி , மீரா –னு தான யோசிக்கறீங்க…..எங்க வீட்டு மாடுங்கபெயர்தான்……அதுங்கள மாடுங்க-னு சொல்லமுடியாது…. நாங்க கூடப்பிறந்த பொறப்பாதான் நினைப்போம்….எப்பவும் கிட்டப்போய் தலைய கோதிவிடவும், வைக்கோல் வைக்கவும்………………“ஹ்ம்ம்ம்ம் அழகான காலம் அது….”

மீராதான் எங்க எல்லார்க்கும் பெட்….மாட்டுப்பொங்கல் வந்தா செம லூட்டியா இருக்கும்…. எங்க பெரியம்மாவ போட்டு உயிரவாங்கிடுவேன்….நான்தான் மாட்ட குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணுவேன்னு….அத குளிப்பாட்டி பொட்டு வச்சு பளபளன்னுபுதுப்பொண்ணு மாரிஅலங்காரம் பண்ணி ரசிப்போம்…இந்த லட்சுமி மட்டும்தான் ரொம்ப பிடிவாதம். எங்க பெரிப்பாவ தவிர யார்கிட்டையும் அடங்காது….அதப்புடுச்சி பொங்கல் சாப்பிடவைக்குறதுக்குள்ள அய்யய்யோ நாங்க படறபாட்ட சொல்லிமாளாது………என்னதான் லட்சுமி அடிக்குற லூட்டில கொஞ்சம் கோபம் இருந்தாலும் அது மாசமா இருந்து கன்னுக்குட்டி பெத்தெடுக்கும்போது என் இதயத்துடிப்பே நின்னுடும் போல இருந்துச்சு…. இவுக பிரசவம்-லா மனுசங்களவிட ரொம்ப கஷ்டமானதுங்க…..செப்பா இன்னும் அப்படியே என் கண்ணுக்குள்ளயே இருக்கு அதுபட்டபாடு…..….ஆத்தாடி அப்படியே என் நினைப்பவிட்டு கொஞ்சம் நிஜ உலகத்துக்கு வந்துட்டேன்…..இப்ப வயக்காட்டு மண்ணு….நாத்து நடாத நிலத்தபார்த்திருக்கீங்களா??? அந்த மண்ணு ஒரு மாரி கருப்பா , அடர்சிவப்பா அப்படியே முகத்துல எடுத்து ஒத்திக்கனும் போல தோணும்….இது என்னோட ரொம்ப நாள் ஆசை…. ஹ்ம்ம்… ரொம்ப லேட்டாதான் இந்த ரசனையெல்லாம்வருது………………………………………..

“இப்ப எங்க வயல்-லாம் இல்ல…இருந்தா இந்நேரம் அங்கபோய் மூஞ்சிபூரா அப்பி இருப்பேன் இடுகாட்டு சித்தர்மாதிரி….ஹா ஹா….”…..

அப்புறம் ஒரு தாத்தா ஏர் கலவைல மாட வச்சு உழுதுகிட்டு இருந்தார்…..இப்பலாம் இந்தகாட்சி ரொம்ப அரிதாயிடுச்சு…. காரணம் டெக்னாலஜிதான்…இப்பல்லாம் யாரு கஷ்டப்படுறா ??? டிராக்டர்லதான் உழுறாங்க….அப்ப இருந்த விவசாயிங்கமண்ணக்கூட பெத்ததாயா நினைச்சதாலதான் என்னவோ இந்த மிஷின், எந்திரத்தையெல்லாம் உள்ளவிடாம பக்குவமா மண்ணாத்தாளுக்கு வலிக்காம உழுதாங்க…..அது அவுங்க உடம்புக்கும் வலிமைய கூட்டுச்சு…ஹ்ம்ம்…. இப்பல்லாம்யாரு கஷ்டப்பட தயாரா இருக்கா ??? காலம் மாற மாற மக்களும் மாறிக்கிட்டே இருக்காங்க……

அப்புறம் ஒரு செக்போஸ்ட் தாண்டி போனோம்…அந்த செக்போஸ்ட்ல நிக்கற ஒவ்வொரு மனிதனைப்பார்க்கும்போதும் ஒரு தேடல்எனக்கு கிடைச்சுது…
வேலைக்கு போற ஒருத்தர்”எப்படா இந்த ரயில் வேகமா போய் தொலையும்……. ஏற்கனவே நேரம் ஆகிடுச்சு-னு” அவர் புலம்பும்சத்தம் அவர் விழி வரை ஏக்கமா எட்டிப்பார்த்ததை உணரமுடிந்தது….

பள்ளிக்கூடம் போகிறபிள்ளைங்கெல்லாம்ஜாலியா வேடிக்கைபாத்துட்டு இருந்தாங்க…..
வாலிபகூட்டம், இதுல எதாவது நல்ல கலர் இருக்கானு தீவிரமா பாக்கறமாதிரிஇருந்துச்சு…..
ஒவ்வொருத்தர் பார்வையிலும்ஒவ்வொரு தேடல், தேடலின் விடை எளிதல்ல என்பதை உணர்த்துவதுபோல் நொடிப்பொழுதில் ரயில் செக்போஸ்ட்டை கடந்துப்போச்சு….
இப்படியே பயணம் போய்கிட்டேஇருக்கறப்ப எதார்த்தமா தண்டவாளத்துக்கு கீழபார்த்தேன்….

மனிதக்கழிவுகள்………………………………………………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்ன சொல்ல…?......என்னதான் டெக்னாஜி வளர்ந்தாலும் இந்த விஷயத்துல மக்கள் மாறவே இல்லனுதான் சொல்லனும்….ஐந்தறிவு உள்ள நாய்கூட ஓரமா போய் அதுவேலைய முடிக்குது…ஆனா இந்த மக்கள் ஏந்தான் இப்படி பண்ணுறாங்களோனு மனம் எரிச்சலில் புகைந்தது……
அப்பொழுது அந்த புகைச்சலை விரட்டும் வண்ணமாய் தட்டான் கூட்டங்கள் என்னை சிறகடித்து சில நேரம் பறக்கச்செய்தது……அப்பொழுது ஒரு ஒத்தையடிப் பாதையில் ஒரு தாத்தாவும் நாயும் சென்றனர்…..நல்ல வயசான தாத்தா..கொஞ்சம் எலும்பும் தோலுமாய் இருக்கிற நாய். அப்படியே அவர பின் தொடர்ந்து போய்க்கிட்டு இருந்துச்சு…..எனக்கு அதப்பார்த்ததும் ஒண்ணு தோணுச்சு….இந்த உலகத்துலயே ரொம்ப பாசமான நன்றியுள்ள ஜீவன்னு சொன்னா கண்டிப்பா நாய்தாங்க…நல்லா நோட் பண்ணிப்பாருங்க…எந்த ஒரு இக்கட்டான நிலையிலயும்நாம வளர்த்த நாய் நம்மளவிட்டு போகாது….இந்த உலகத்துல ஏதோ ஒரு நல்ல ஜீவனாவது இருக்கே…..அப்பறம் ஒரு வயக்காட்டுல வெறும் தண்ணீர் மட்டும் இருந்துச்சு… வரப்புல…பார்க்க அப்படியே கண்ணாடிமாதிரிஅழகா இருந்துச்சு…..அந்த தண்ணீ கண்ணாடிமாதிரி இருந்ததால என்னவோ கொக்கு தண்ணியவே பாத்துட்டு இருந்துச்சு….

“ஒரு வேல, தன் அழக அந்த கண்ணாடி தண்ணீர்ல பாத்து ரசிச்சு இருக்குமோ ?? ….”.

ஹ்ம்ம் இருக்கலாம்…… அப்படியே கொஞ்சம் நேரா திரும்புனேன்…. ஒரு ஆள் கதவுக்கிட்ட நின்னுட்டு இருந்தார்….குட்டையா வெள்ள சட்ட போட்டு….பாக்க அப்படியே போலீஸ்காரர் மாதிரியே இருந்தாரு…..ஒரு வேல போலீஸ்ஸா இருக்குமோ….மப்டில டியூட்டி பாக்குறாரோ….. !(இண்டர்சிட்டி ரயில்ல சில சமயம் போலீஸ் இப்படி வருவாங்க…….. எதாவது தீபாவளி , பொங்கல் பண்டிகை நேரத்துல…ஆனா இப்ப எதும் பண்டிகை இல்லை.. )முன்னெல்லாம் குட்டையா இருந்தா போலீஸ்வேலைக்கு எடுக்கமாட்டாங்க…ஆனா இப்ப அப்படியா இருக்கு…. பணம் இருந்தா ஜனாதிபதி கூட ஆகிடலாம் போல …..ஹ்ம்ம்ம் பணம் பாதளம் வர பாயும்னு சும்மாவா சொன்னாங்க…என்னைக்கு இந்த லஞ்சம் நம்ம நாட்டுல ஒழியுதோ அன்னைக்குதான் உண்மையான விடிவுகாலம் நமக்கு….ஹ்ம்ம் இப்படியே யோசிச்சுட்டே இருந்தேனா…அப்படியே சன்னல் பக்கம் திரும்பிட்டேன்…. சூடா இருந்த என் மூளைய குளுமையா ஆக்கறமாதிரி கொடைக்கானல் ரோடு வந்துச்சு….. யானை தரையோடு தரையா படுத்தமாதிரிஅழகான நெளிவுகளோட மலைகள் எங்கள வரவேற்றன…..

சரியான பனி…..மலைகள கூட சரியா தெரியல…பனிக்கு இதமா சுடாத வெயில்னு கொஞ்சநேரம் என் பயணம் அழகா போச்சு…..அப்பறம் ஒரு ரயில் நிலையத்துல ஒரு பெயர்பலகை பார்த்தேன்….

”வாடிப்பட்டி”–னு போட்டு இருந்துச்சு….சில ஊர்ல பெயர்பலகை பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பா வரும்…. பெயர்காரணம் என்னவா இருக்கும்-னு தோணும்…. இந்த வாடிப்பட்டிக்கு கேரளாக்காரன் யாராவது வந்தா என்ன நினைப்பான்….ஹா ஹா…….எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு..அதப்படிச்சதும் ரஜினி-யோட முத்து படம்தான் ஞாபகம் வந்துச்சு….அப்பறம் கருப்பட்டி-னு ஒரு ஊரு….ஒரு வேல கருப்பட்டி அங்க அதிகமா கிடைக்குமா?? தெரியல…ஆனா இந்த ஊர் பெயர்க்கு பின்னாடி எதாவது காரணங்கள் இருக்கதான் செய்யுது…ஆனா இப்பதான் நம்ம மக்கள் அதையும் மாத்திடுறாங்களே எதையும் விட்டுவைக்கமாட்டாங்க போல….

உதாரணம்………………….. திருசீற்றலைவாய்-னு அழகா இருந்த பெயர மாத்தி திருச்செந்தூர்னு வச்சாங்க… எனக்கு தெரிஞ்சு திருசீற்றலைவாய் தான் பொருத்தமா இருக்கு….நிறைய இலக்கியங்கள் படிக்கும் போது இது என்ன ஊரு வித்தியாசமான் பேரா இருக்கேனு கூகுள் தட்டும் போது தான் தெரியுது, கடைசில நம்ம ஊரே இருக்கும் இல்ல நமக்கு தெரிஞ்ச ஊரா தான் இருக்கும்…..அப்பதான் நமக்கு நம்ம மண்ணோட பெயரின் பெருமை புரியுது…..ஹ்ம்ம்…. இப்படியே யோசனை போய்ட்டே இருந்துச்சு….. அப்ப ஒரு வயல்ல கூட்டம் கூட்டமா எதோ பண்ணுறாங்களே-னு உத்துபாத்தேன்….நாத்து நட்டுட்டு இருந்தாங்க…. பாக்கவே ஆசையா இருந்துச்சு….நானும் அங்க போகணும்போல இருந்துச்சு… ஹ்ம்…பொதுவா நாத்து நடறப்ப கதிர் அறுக்குறப்ப பாட்டெல்லாம்படிப்பாங்க…ஒருவேல இவுங்களும் படிச்சு இருக்கலாம்...ஆனா இரயில் சத்தத்துல எதும் கேக்கல…..எங்க தாத்தா ஊருல இருந்தப்ப வயல்ல பாத்து இருக்கேன்……கேக்கவே சுகமாஇருக்கும்…இப்ப வரதுலாம் என்னபாடல்…நாட்டுப்புறப்பாடல்க்கு எதும் ஈடாகாது…. ஹ்ம்ம்ம் அழிஞ்சுவர பட்டியல்-ல நாட்டுப்புறப்பாடல் தான் முதல்ல சேர்க்கனும்…. ஹ்ம்ம்….. அப்பறம் வண்டி சோழவந்தான் வந்துச்சு…..பகட்டுக்கு பெயர் போன ஊரு….ஆத்தாடி மறந்து அந்தபக்கம் காலே வைக்கக்கூடாது…..நடக்குறதுக்கு கூட காசு கேப்பாங்கனு நினைக்கறேன்….என் சொந்த அனுபவம்….என் அக்காக்கு அங்க ஒரு மாப்பிள்ளவீடு வந்துச்சு…..அவுங்க கேட்ட லிஸ்ட்ட பாத்தா அங்க பொண்ணு கட்டிக்கொடுக்கனும்னா பரம்பரை பணக்காரனா இருக்கனும் ….செப்பா…..நான் எல்லாரையும் சொல்லல….ஒரு சிலர் அப்படி இருக்காங்க…..சரியான பணப்பேய்கள்….முதல்ல இவுங்கள தான் வரதட்சனை கேஸ்-ல புடிச்சுப்போடனும்….அப்பறம் கொஞ்ச தூரத்துல சில பசங்க கோலி விளையாடிட்டு இருந்தாங்க…..அதப்பாத்ததும் என் கிராமத்து வாழ்க்கதான் ஞாபகம் வந்துச்சு….கோலி,கில்லி-னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் அனுபவிச்ச ஒரே ஒரு வருஷம்….ஹ்ம்ம்ம்ம்…..அப்பறம் ஒரு இடத்துல விறகுவெட்டிட்டு இருந்தாங்க.. என்னதான் டெக்னாஜி வளர்ந்தாலும் விறகுவெட்டி பொழைக்குறவங்க இன்னும் அதே வேலைல தான் இருக்காங்க……ஆனா சிலபேர் நாடு முன்னேறிடுச்சுனு ஏன்தான் உளறிட்டு திரியுறாங்கனு எனக்கு புரியவே மாட்டிக்குது…..

ஹ்ம்ம்..கிறுக்குபயபுள்ளைங்க………………………

ந(ர)க(ர)ம் ( என்னப் பொருத்தவர நகரம் ஒரு நரகம்…சோ யாருக்கு எப்படி வசதியோ அப்படி படிச்சுக்கோங்க அதுக்கு தான் பிராக்கெட்-ல இரண்டு ர போட்டு இருக்கேன் ) விட்டு வெளிய வந்தாதான தெரியும் உலகம் எப்படினு……இப்படி உளர்ற பயபுள்ளைகள பிடிச்சு வெறகுவெட்டவிடனும்…..ஆமா….

இப்படியே புலம்பல்-ல போன என் பயணத்துல கொஞ்சநேரம் யோசிக்க எதுவும் சிக்கல சன்னல் ஓரத்துல...... “ தக் புக்கு தக் , தக் புக்கு தக் “-னு இரயில் சங்கீதத்துல என் பயணம் கொஞ்சநேரம் அமைதியா போச்சு…….

இன்னும் பேசுவோம்…. பேசி பேசி கொஞ்சம் கலைப்பாகிடுச்சு….. ஒரு டீ குடிச்சுட்டு வரேன்…….பயணம் முடியவில்லை……… தொடரும்.........................

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (28-Nov-14, 4:29 pm)
பார்வை : 161

மேலே