காகமும் நானும்
காகம் கரைந்து கொண்டிருந்தது
விழிப்பு வந்தது ,
கடிகாரம் மதியம் ஒரு
மணியை காட்டியது
காகத்திற்கு பசி புரிந்தது ,
என் தூக்கம் மட்டுமே
கலந்தது ,
வாரம் முழுவதும்
வருடமாய் பயணித்தது ,
ஊதியம் வாங்காமல்
வேலை என் முதுகில்
அமர்ந்து இருந்தது
நான் அதை தேடி
செல்கிறேன்,
பசிக்கு உணவாய்
தூக்கம் மட்டும் தான்
தருகிறேன் .