தமிழ்
பல மொழி வந்த பொழுதும்,
தமிழ் மொழி மறைந்ததில்லை.
என் நாவில் தமிழைத் தவிற
பிற மொழி பிறந்ததில்லை.
எங்கு சென்றாலும் தமிழை
வாழ வைப்பேன்,
எந்த சூழ்நிலையிலும் தமிழன்
என்றே என்னுள் உரைப்பேன்.
இரவு படரும் நேரத்தில்,
நிலவு ஒளிரும் நேரத்தில்,
தமிழுக்காக வரலாறு ஒன்று எழுதுவேன்.
விடியும் முன்னமே
இப் பூமியில் தமிழே
தாய் மொழி என்று சொல்ல
ஆசை கொள்வேன்.
தமிழ் என்று சொல்லும்போதே
உணர்ச்சிகளுக்கும் புல்லரிக்கும்.
பாலைவனத்தில் விட்டாலும்
தமிழ் மூச்சில் இந்த ஜீவன்
உயிர் வாழும்.
மழை ஒன்று பொழியும் பொழுது,
மனம் அன்று நனையும் பொழுது,
தமிழ் மொழியில் கரைந்து எழுதுவேன் கவிதை.
இதுவரை நான் வாழ்ந்த
நாள்களுக்கு சாட்சியாய் எங்கும்
சொல்வேன் தமிழ் மொழி
தான் விதை!
நான் மனிதன் அல்ல தமிழன்!!!

