நற்றமிழ்
கருவில் கலந்து
உருவில் வளர்ந்த மொழி
உள்ளம் நுழைந்து
கள்ளம் அழித்த மொழி
அணுவில் ஆழ்ந்து
நினைவில் வீழ்ந்த் மொழி
ஈரா ருயிரை
வேராய் பற்றிய மொழி
மூவாரு மெய்யினை
சாராய் ஊற்றிய மொழி
பொய்யில் புலவன்
போற்றிய மொழி
சிலம்பின் கதைச் சொல்லி
காட்டிய மொழி
உன்னுள் என்னுள்
ஒலிரும் மொழி
நன்னூள் பலவற்றில்
திகழும் மொழி
நானிலம் போற்றி
மகிழும் மொழி
நாவிலே தோன்றும்
நற்றமிழ் மொழி.

