எழிலி

ஒரு தோழியின் வேண்டுகோளுக்கு இணங்க வனையப்பட்ட சந்தப் பா !

எழில்மிகு மலைகளும் உண்டு - வண்ணம்
-----ஏறிய வானவில் உண்டு
பொழில்தரும் தென்றலும் உண்டு - நாளும்
-----பொலிவுறும் கதிரவன் உண்டு !
மழைதரும் முகிலினம் உண்டு - மண்ணில்
-----மணக்கின்ற வாசமும் உண்டு
கழைதரும் ராகமும் உண்டு - நானும்
-----களித்தேன் இவைகளைக் கண்டு !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (29-Nov-14, 4:51 pm)
Tanglish : iyarkai ezil
பார்வை : 115

மேலே