காதல் வந்தால்-கயல்விழி

காதல் வந்து
விட்டால்
கற்சிலைகளும்
கண் சிமிட்டும்
வீசிடும் காற்றும்
சற்று ஓய்வெடுக்கும்
தீட்டிடும் ஓவியம்
வாய்திறக்கும்
அடிகின்ற அலையும்
அமைதியாகும்
கடவுளும் கவி
வடிப்பான்
காதலில் தன்நிலை
மறப்பான்
குடிசைகள் கோபுரமாய் தெரிய
பில்கேட்ஷும் பிச்சை
எடுப்பான்
கதிரவன் குளிராவான்
சந்திரன் அனலாவான்
விண்ணில் மண்ணில்
வேற்றுகிரகத்தில்
மனிதரில் விலங்கில்
பறவையில் படைத்தவனில்
புகுந்து விட்டால் காதல்
மறைத்து விடும் விழிகளை
மாற்றி விடும் வாழ்க்கையை .!!
(சும்மா சும்மா )