அவளின் ஆசை
வெள்ளையும் அல்ல
குள்ளையும் அல்ல
உயரமும் அல்ல
கறு உருவமும் அல்ல
மாநிற மன்னன்
புல்லாங்குழல் இல்லாத கண்ணன்
தேன் பருகும் வித்தை
அறிந்த ஓர் தேனீ
மலரிதழ் வாடும் முன்
விரைந்து தான் வா நீ
மாலையிட தோள்களை
சாய்த்திட ஆசை
மாயவனே நின் தோள் மேல்
கிடந்திடவே ஆசை
விரைந்து வா என்னவா
விரைகிறது காலம்
விரைந்து வா மன்னவா
கரைகிறது இளமையெனும் கோலம்