மழையே

மலை மீது குதித்தாலும்
மறித்து போவதில்லை

சிதறியே போனாலும்
சிதைந்து போவதில்லை

இலை மீது விழுந்தாலும்
இறந்து போவதில்லை

வழிந்தோடி வந்து ஒன்றாகி
நதியாகி நடை நீட்டி செல்கிறாய்

பூமி பெண்ணின் இடை மீட்டி
இசை பாடி செல்கிறாய் மழையே!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (1-Dec-14, 4:15 pm)
Tanglish : mazhaiyae
பார்வை : 104

மேலே