உலகம் என்றல் என்ன

உலகம் என்றல் என்ன......?
இங்கு ஏன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமக்குள் ஏன் இந்த பிரிவு நிலைகள்..?
ஏழை பணக்காரன் என்று...
ஏன் கடவுள் நம்மை இவ்வாறு படைத்தான்...
எதற்காக இந்த பிரிவுநிலைகளும் வேற்றுமைகளும்....
ஏன் மனிதர்களை உடல் ஊனமுற்றவர்களாக படைக்க வேண்டும்.....
நமக்குள் ஏன் இத்தனை நிறை குறைகள்....?
நம்மை இவ்வாறு படைத்து விட்டு அவன் மட்டும் அங்கு என்ன செய்கிறான்.....
அன்றாட வாழ்க்கையாகிய உணவு,உடை,இருப்பிடம்....
இவற்றை கூட இல்லாமல் மனிதர்களை படைத்தது ஏன்..?
அவை இருந்தும் மற்றவர்களால் பறிக்கபடுவது ஏன்..?
நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை
மற்றவர்கள் ஏன் தீர்மானிக்க வேண்டும்.....?
இதற்கு அவன் நம்மை படைக்காமலே இருந்திருக்கலாமே....
இப்படி நம்மை அவன் படைத்ததன் நோக்கம் தான் என்ன..?
உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு எதிர்வினை....
கடவுள் யார்...?
அவரை யாரவது பார்த்ததுண்டா....
ஏன் அவன் இவ்வாறு செய்கிறான்....?
அவனை நாம் ஏன் வணங்க வேண்டும்...?போற்ற வேண்டும்....?
அவன் இருக்கானா....? இல்லையா.....?
நம்மிடம் உள்ள ஏற்றதாழ்வுகளுக்கிடையில் அவனால் என்ன இன்பம் காண முடிகிறது.....?
நமக்கிடையில் ஏன் இத்தனை
மொழிகள்,பழக்கவழக்கங்கள்,கலாச்சாரங்கள்,குற்றங்கள்,தண்டனைகள்,
நன்மை,தீமைகள்,நட்பு,காதல்,அன்பு,காமம்,ஆண்,பெண்,
பறவைகள்,விலங்குகள்,நடைமுறைகள்,இசை,நடனம் ,சிரிப்பு,சோகம்,புதுகண்டுபிடிப்புகள்........
நாம் ஏன் பிறக்கிறோம்...?
பிறந்த நாம் இறக்கிறோம்...?
இறைவா....?
இது உனக்கே நியாயமா......?

எழுதியவர் : நவீன்குமார் கு (1-Dec-14, 5:51 pm)
Tanglish : ulakam endral yenna
பார்வை : 119

மேலே